போதை நெட்வொர்க்! ED வளையத்தில் ஜான் பிரிட்டோ - மார்ட்டின் குடும்பத்துடன் இவருக்கு என்ன தொடர்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் மற்றும் தொழில் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ரூ.258 கோடி மதிப்பிலான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வழக்கின் மூளையாகச் செயல்பட்டவர் ஜான் பிரிட்டோ (John Britto) என அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. காரணம், ஜான் பிரிட்டோ தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ் மார்ட்டினின் சொந்த மூத்த சகோதரர் ஆவார்.

மார்ட்டின் குழுமத்தின் வணிக நிறுவனங்கள் சிலவற்றில் ஜான் பிரிட்டோ முக்கியப் பொறுப்புகளில் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அரசியல்-கார்ப்பரேட் தொடர்பு தான் தற்போதைய வழக்கை மிகப் பெரிய விவாதப் பொருளாக மாற்றியுள்ளது.

Drug Mafia John Britto under ED scanner what is his connection to the Martin family

அமலாக்கத்துறை சோதனை மற்றும் வழக்கின் பின்னணி

கடந்த மே 26, 2026 அன்று சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து முக்கிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) பதிவு செய்த இரண்டு முக்கிய போதைப்பொருள் கடத்தல் வழக்குகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.

அமலாக்கத்துறையின் முதற்கட்ட விசாரணையில், இரு வழக்குகளும் தனித்தனியானவை அல்ல; ஒரே நெட்வொர்க்கின் பகுதிகள் என்பது தெரியவந்துள்ளது. ஜான் பிரிட்டோ இந்த நெட்வொர்க்கின் மாஸ்டர் மைண்ட் மற்றும் வழக்கமான குற்றவாளி என ED தெரிவித்துள்ளது.

வழக்கு 1: மன்னார் வளைகுடா ஹஷீஷ் கடத்தல்

2024 மார்ச் 5 அன்று மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இந்திய கடலோர காவல்படை மற்றும் DRI அதிகாரிகள் இணைந்து நடத்திய ஆபரேஷனில் 99 கிலோ ஹஷீஷ் (Hashish) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் ரூ.108 கோடி. இந்த கடத்தலில் ரெமிஷ், ஜான்சன், பிரதாப் உள்ளிட்டோர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் ஜான் பிரிட்டோவின் உத்தரவின் பேரில் செயல்பட்டதாக ED தெரிவித்துள்ளது

வழக்கு 2: மதுரை ரயில் நிலைய மெத்தம்பெட்டமைன் கடத்தல்

மற்றொரு வழக்கில், மதுரை ரயில் நிலையத்தில் பிலோமென் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 37.645 கிலோ மெத்தம்பெட்டமைன் (Methamphetamine - ICE) பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.150 கோடி. இந்த இரு வழக்குகளும் ஜான் பிரிட்டோவின் ஒரே சர்வதேச நெட்வொர்க்குடன் தொடர்புடையவை என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடத்தல் நெட்வொர்க் இயங்கிய விதம்

ஜான் பிரிட்டோ தலைமையிலான கும்பல் தமிழகத்தின் நீண்ட கடலோரப் பகுதிகளைப் பயன்படுத்தியுள்ளது. மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்களை பண ஆசை காட்டி இழுத்து, கடலில் போதைப்பொருட்களை ஏற்றி இலங்கை சர்வதேச கடத்தல் கும்பலிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த முறை கடலோர கண்காணிப்பைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணம் ஹவாலா மூலம் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டது. ஜான் பிரிட்டோவின் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு இந்த பணம் சென்றதாக ED குறிப்பிட்டுள்ளது.

சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. ஜான் பிரிட்டோ தற்போது இந்தியாவில் இல்லை; வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தபடி சாட்டிலைட் போன் மற்றும் ரகசிய செயலிகள் மூலம் நெட்வொர்க்கை இயக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் பரபரப்பு:

தமிழகத்தில் முக்கிய அரசியல் குடும்பத்துடன் ஜான் பிரிட்டோவுக்கு உள்ள தொடர்பு காரணமாக எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. சமூக ஊடகங்களில் பெரும் விவாதம் நடைபெறுகிறது. அமலாக்கத்துறை தலைமறைவு ஜான் பிரிட்டோவை நாடு திரும்பச் செய்யவும், தொடர்புடைய பிற புள்ளிகளை அம்பலப்படுத்தவும் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. வரும் நாட்களில் தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+