For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை.. கேரளாவில் செயல்படும் பகீர் கும்பல்

Google Oneindia Tamil News

கொல்லம்: கேரள மாநிலத்தில் படிக்கும் கல்லூரி மாணவ,மாணவிகளை குறிவைத்து போதை மாத்திரைகளை சப்ளை செய்யும் கும்பலை சார்ந்த ஒருவன் கொல்லம் அருகே போலீசாரிடம் பிடிபட்டுள்ளான்.

அவனிடம் நடத்திய விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு போதை மாத்திரை வினியோகம் செய்த குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் - கருநாகப்பள்ளி என்ற பகுதியில் அம்மாநில போதைப்பொருள் தடுப்பு காவல்துறை ஆய்வாளர் ஜோஸ் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர்.

வாகனத்தில் கடத்தல்

வாகனத்தில் கடத்தல்

அந்த வாகனத்தை ஓட்டிவந்த நபர் முன்னுக்குபின் முரணாக பதில் செல்லியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரிடம் சிறப்பாக கவனிக்கவே அவன் கல்லேலி என்ற இடத்தை சேர்ந்த ஷெபின் 20 வயது என்பதும் இவர் வண்டியில் மறைந்து 70 (Nitrazepam என்ற) போதை மாத்திரைகளை எடுத்து வந்ததையும் கண்டுபிடித்தனர்.

 போதை மருந்து சப்ளை

போதை மருந்து சப்ளை

ஷெபினிடம் நடத்திய விசாரணயில் இவன் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை குறிவைத்து மாணவர்களுக்கும் கொடுப்பதற்கு இந்த போதை மாத்திரைகளை கொண்டு செல்வதாக கூறியுள்ளான். மேலும் கன்னியாகுமரியிலுள்ள பல என்ஜினியரீங் கல்லூரிகளில் படிக்கின்ற கேரளாவை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த மாத்திரைகளை வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடந்த மாதம் கொல்லம் மைனாக பள்ளி என்ற ஊரில் ஆளில்லாத கட்டிடத்தில் மறைந்திருந்து போதை பொருட்கள் உபயோகித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்களையும் கைது செய்துள்ளார்.

இரண்டு பேர் தப்பியோட்டம்

இரண்டு பேர் தப்பியோட்டம்

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் தமிழத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக ரயிலில் கேரளாவுக்கு நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகளை கடத்தி சென்ற கேரளாவை சேர்ந்த அஜ்மல் ( 21 ) என்பவர் கைது செய்யப்பட்டார்.அதில் இவரது கூட்டாளிகள் இரண்டுபேர் தப்பி ஓடிவிட்டனர்.

பொதுமக்கள் கோரிக்கை

பொதுமக்கள் கோரிக்கை

தமிழக- கேரளா எல்லையான குமரி மாவட்டத்தில் ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் அன்று மாத்திரை சிக்கியது. எனவே இருமாநில எல்லைகளிலுள்ள சோதனை சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி சோதனைகளை தீவீரமாக நடத்தினால்தான் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை மொத்தமாக கைது செய்யமுடியும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

English summary
Drug supply Gang in kollam, college students gets Drugs in Kanniyakumari, ome person arrested in kollam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X