ராமப்பட்டனம் செக்போஸ்ட்டில் "ஆனந்த" நடனம் ஆடிய போலீஸ்காரர்.. காரணம் போதை!
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே காவல்துறை செக்போஸ்ட்டில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் நன்றாக குடித்து விட்டு போதையில் நடனம் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மாவட்ட எஸ்.பி. சுதாகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் காவலராக இருந்து வருபவர் ஆனந்தகுமார். இவர் நேற்று சக போலீஸ்காரர்களுடன் பொள்ளாச்சி அருகிலுள்ள இராமப்பட்டினம் சோதனை சாவடியில் பணியில் இருந்தார். அப்போது நல்ல போதையில் இருந்த ஆனந்தகுமார், திடீரென சக போலீஸாருடன் வாய்ச்சண்டையில் இறங்கினார்.

பின்னர் ரோட்டுக்கு வந்த அவர் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல், டான்ஸ் ஆட ஆரம்பித்தார். சீருடையில் போலீஸ்காரர் ஒருவர் போதைத் தாக்குதலில் டான்ஸ் ஆடியதை அப்பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்து அதிர்ந்தனர். பின்னர் பொதுமக்களே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். எஸ்.பி. சுதாகர் காதுக்கும் இது சென்றது. இதையடுத்து விசாரணை நடத்திய அவர் ஆனந்தகுமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications