அமித்ஷா வருகையால் தமிழகத்தில் மழை பெய்துள்ளது, தாமரை மலர்ந்தே தீரும்.. தமிழிசை நம்பிக்கை
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வருகையால் தமிழகத்தில் மழை பெய்து இருக்கிறது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வருகையால் தமிழகத்தில் மழை பெய்து இருக்கிறது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
லோக் சபா தேர்தல் குறித்து ஆலோசனை நடந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று தமிழகம் வந்தார். சென்னையில் உள்ள தனியார் அரங்கு ஒன்றில் இதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

இதற்காக பாஜக கட்சி இப்போதே தயாராகிவிட்டது என்று கூட கூறலாம். அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, இந்த தேர்தலுக்காக, கட்சி நிர்வாகிகளை எல்லா மாநிலங்களுக்கும் சென்று சந்தித்து வருகிறார்.தேர்தல் திட்ட பணிகள் குறித்து அவர் இந்த சந்திப்பில் பேசி வருகிறார். அவரின் தமிழக வருகை குறித்து, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவரின் வருகை கட்சியினர் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் பாஜக தற்போது வலுவாக இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகதான் வெற்றிபெறும்.
அமித் ஷா வருகையால் தமிழகத்தில் மழை பெய்துள்ளது.இந்த மழையால் தமிழக குளங்கள் நிரம்பும்.நீர் நிரம்பினால் தாமரை தானாக மலரும். இதனால் தமிழகம் பலனடையும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications