நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் டிசம்பர் 13ம் தேதிவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

due to rain school holiday for Nagapattinam

சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நகரின் பல பகுதிகள் சேறும், சகதியுமாக இருக்கிறது. இன்னும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ஆங்காங்கே குப்பைகளும் தேங்கி கிடக்கிறது. இதனை அகற்றும் பணியில் பல்வேறு மாவட்டங்களில் வந்துள்ள துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அந்த பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

மழையால் பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி வளாகங்களை தூய்மைப்படுத்த வேண்டிய பணி உள்ளது. எனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 13ம் தேதிவரை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாகை மாவட்டத்தி்ல் பெய்து வரும் மழை காரணமாக இன்று விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் பழனிச்சாமி உத்தரவின் பேரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+