Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி வெள்ளி.. தக்காளியை தூக்கி சாப்பிட்ட மல்லி, பிச்சி பூக்கள்! விலை இருமடங்காக உயர்வு

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: ஆடி வெள்ளி மற்றும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆடி மாதங்களில் திருமணங்கள் நடைபெறாவிட்டாலும், கோயில் திருவிழாக்கள், கொடைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் பூக்களின் தேவை அதிகரித்தது. எனேவே விலையும் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கிலோ ரூ.200க்கு விற்கப்பட்ட மல்லி தற்போது கிலோ ரூ.500க்கு விற்பனையாகி வருகிறது. சென்னை, மதுரை, கன்னியாகுமரி என மாநிலம் முழுவதும் பூக்களின் விலை இதேபோல கணிசமாக அதிகரித்துள்ளது.

Due to Aadi Friday, the price of flowers has increased drastically across Tamilnadu

மதுரையை பொறுத்த அளவில் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.600க்கு விற்பனையாகிறது. அதேபோல சம்பங்கி ரூ.200, பிச்சி ரூ.500, முல்லை ரூ.400, பட்ரோஸ் ரூ.150, செவந்தி ரூ.250, அரளி ரூ.200 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக மதுரையை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும், தேனியிலிருந்தும் பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஆனால் கன்னியாகுமரியின் தோவாளை பூ மார்கெட்டுக்கு பூக்கள் அங்கிருந்தே அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

எனவே விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏறத்தாழ இதே விலையில்தான் பூக்கள் விற்பனையாகின்றன. இங்கு நேற்று ஒரு கிலோ ரூ.250க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மல்லிகை விலை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல திருப்பூர் பூ மார்கெட்டிலும் ஒரு கிலோ மல்லி ரூ.450க்கு விற்பனை செய்யப்படுகிறது. முல்லை ரூ.250க்கும், அரளி ரூ.240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பூரில் சமீப நாட்களாக பலத்த காற்று வீசி வருவதால் பூக்கள் உதிர்ந்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாக வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. தோவாளை, மதுரை, திருப்பூர் என எல்லவற்றிற்கும் டாப்பாக சென்னையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக தக்காளி விலைதான் பேசு பொருளாக இருந்த நிலையில், தற்போது இந்த பூக்களின் விலை பேசுபொருளாகியுள்ளது.

அதாவது முல்லை ஒரு கிலோ ரூ.540க்கும், மல்லி ரூ.630க்கும், ஜாதிமல்லி ரூ.500க்கும் விற்பனையாகிறது. இது தவிர காக்கரத்தான் ரூ.300, கனகாம்பரம் ரூ.250, ரோஜா ரூ.300, அரளி ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+