துரைமுருகனுக்கு நெஞ்சுவலி.. வேலூர் சிஎம்சியில் அனுமதி.. டாக்டர்கள் தீவிர சிகிச்சை
திமுக தலைமை கழக முதன்மை செயலாளரும், முன்னாள் தமிழக அமைச்சருமான துரைமுருகன் சென்னை வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் வேலூர் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர்: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நெஞ்சு வலி காரணமாக சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திமுக தலைவர் கருணாநிதிக்கும், செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் நெருக்கமாக இருப்பவர் துரைமுருகன். சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் செயலாற்றி வரும் அவர், சென்னைக்கு வரும் வழியில் திடீர் என்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இன்று காலை 5 மணியளவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

துரைமுருகன், உடல் நலமுடன் உள்ளதாகவும், அச்சப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துரைமுருகன் வேலூர் காட்பாடி தொகுதியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
கடந்த நவம்பர் மாதத்தில், துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்தார். பின்னர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த 3 மாதத்திற்குள் துரைமுருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications