திமுக- மதிமுக இணைப்பா? மூத்த நிர்வாகி துரைசாமி மீது நடவடிக்கை இல்லை.. துரை வைகோ பதில்
சென்னை: மதிமுகவில் துரைசாமி குழப்பத்தை ஏற்படுத்துகிறார், அவருடைய கடிதத்தை புறந்தள்ளுங்கள் என மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மதிமுகவை தொடங்கிய போது தங்களின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர்.
ஆனால் அண்மைக்காலமாக அவரது குழப்பமான செயல்பாடுகள் காரணமாக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டனர். மேலும் கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்து விட்டது.

இதை வைகோ உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது. மதிமுக தொடங்கப்பட்டது முதல் 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க தங்களது பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சால சிறந்தது என வைகோவை கடுமையா சாடி கடிதம் எழுதியுள்ளார் துரைசாமி.
வைகோவிற்கு ஏற்கெனவே 4 முறை கடிதம் எழுதியும் ஏன் பதில் தரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய வைகோ, கட்சியில் நான் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். கட்சியில் நானா பிளவை ஏற்படுத்துகிறேன் என துரைசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.
மதிமுக தலைமை நிலைய செயலாளராக துரை வைகோ நியமனத்தை எதிர்த்து திருப்பூர் துரைசாமி எதிர்ப்பு குரல் கொடுத்திருந்தார். இந்த கடிதத்திற்கு துரை வைகோ பதில் அளித்துள்ளார். டிவி சேனல் ஒன்றுக்கு துரை வைகோ அளித்த பேட்டியில் திமுகவுடன் மதிமுகவை இணைப்பதில் கட்சியினருக்கு துளியும் உடன்பாடில்லை. தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்தாலும் மதிமுகவுக்கு என்று தனிப்பட்ட கொள்கை உள்ளது. மனக்கசப்பு காரணமாக திமுக- மதிமுக இணைப்பு என அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மூத்த நிர்வாகி என்ற மரியாதை காரணமாக துரைசாமி மீது நடவடிக்கை இல்லை என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுகவில் துரைசாமி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். மதிமுகவில் பெரியவர்களுக்கு மரியாதை தருகிறோம். எனவே அவருடைய கடிதத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புறந்தள்ளுங்கள் என துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications