ஸ்டாலின் முதல்வராக வேண்டி கோவில் கோவிலாக ஏறி இறங்கும் மனைவி துர்கா
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கி வருகிறார் அவரது மனைவி துர்கா.
சென்னை: பகுத்தறிவு நம்பிக்கை கொண்ட குடும்பத்தில் இருந்தாலும் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா. கடந்த சில மாதங்களாக அவர் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது அதிகரித்து வருகிறது.
தை பூசம் திருவிழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
சென்னையில் இருந்து பழனிக்கு வந்த துர்கா ஸ்டாலின் வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர் குடும்ப விழாவில் பங்கேற்றார்.

பழனி முருகன் தரிசனம்
துர்கா ஸ்டாலின் ரோப் கார் மூலம் மலைக் கோயிலுக்கு வந்து முருகனை ராஜ அலங்காரத்தில் சாமி தரிசனம் செய்தார். கோயில் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அங்கு வந்திருந்த பக்தர்கள் சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

சித்தர் சன்னதியில் வழிபாடு
அங்கிருந்து போகர் மற்றும் கைலாசநாதர் சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் திமுக பிரமுகர்கள் சித்தனாதன் சன்ஸ் ரவீந்திரன், மெர்சி செந்தில்குமார், இந்திரா திருநாவுக்கரசு, ஆகியோர் வந்து இருந்தனர்.

பழனியில் சுவாமி தரிசனம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி வந்த துர்கா ஸ்டாலின் போகர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். அங்குள்ள, மரகத லிங்கத்தின் சிறப்பு பூஜையிலும் பங்கேற்றார். தற்போது மீண்டும் பழனி முருகனை தரிசனம் செய்துள்ளார்.

இஷ்ட தெய்வம்
பகுத்தறிவு குடும்பமாக இருந்தாலும் சாமி வழிபாடு செய்வதை, எங்கள் குடும்பத்தில், எவரும் தடுப்பதில்லை என்று கூறியுள்ளார். மாரியம்மன் சாமியை எனக்கு பிடிக்கும் என்று ஏற்கனவே கூறியிருக்கிறார் துர்கா ஸ்டாலின்.

கருட சேவை தரிசனம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் 108 திவ்யதேசங்கள் அமைந்துள்ளன. இங்கு வந்திருந்து துர்கா ஸ்டாலின் 124வது கருட சேவை தரிசனம் செய்தார்.

ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல்
திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் யாருமே கோயிலுக்கு செல்ல மாட்டார்கள் என்ற கருத்து நிலவி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு சென்று வருகிறார். தமிழக முதல்வராக திமுக செயல் தலைவர் ஸ்டாரின் அமரவேண்டும் என்பதற்காக அவர் கோவில் கோவிலாக ஏறி இறங்குகிறார் என்று எதிர்கட்சியினர் கிண்டலடித்து வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications