Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.45 கோடி சொத்து குவிப்பு..மாஜி அமைச்சர் கே.பி. அன்பழகன் மீது 10000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தருமபுரி நீதிமன்றத்தில் 10000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளனர். அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக தனது பெயரிலும் அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 45 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கேபி அன்பழகன். இவர் தர்மபுரி பாலக்கோடு தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எம்எல்ஏவாக இருந்து வருகிறார். உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், அதாவது 2016ஆம் ஆண்டு காலகட்டம் முதல் 2021 ஆம் ஆண்டு வரைக்கும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

DVAC case: Charge sheet files against former minister for higher education KP Anbalagan

இதையடுத்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார், கேபி அன்பழகன் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்திருந்தனர். கேபி அன்பழகன் தேர்தலின்போது வேட்பு மனுவில் கூறப்பட்டிருந்த சொத்துக்களின் மதிப்பை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னை, தருமபுரி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் அன்பழகன் பெயரிலும் அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 11 கோடி 32 லட்சத்து 95 ஆயிரத்து 85 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரிய வந்தது.

DVAC case: Charge sheet files against former minister for higher education KP Anbalagan

இதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார்தாரர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தாலும் இதுவரைக்கும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. அதனால் உடனே அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு கடந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை அடுத்து அன்பழகன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டார்.

நீதிமன்றம் உத்தரவிட்டு 10 மாதங்களுக்கு மேல் கடந்த நிலையில் இன்றைய தினம் கே.பி.அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை அதிகாரிகள் தருமபுரி நீதிமன்றத்தில் 10,000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் கேபி அன்பழகன், மனைவி மல்லிகா, மகன் சசிமோகன் சந்திரமோகன், மருமகன் ரவிசங்கர், அக்கா மகன் சரவணன், அக்கா மகன் சரவணக்குமார், காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மாணிக்கம், பள்ளி நிர்வாகி தனபால், உள்ளிட்ட பதினோறு பேர் மீது வழக்கு பதிவு செய்துளாளது. சுமார் 10,000 பக்கங்கள் அளவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 58 இடங்களில் நடந்த சோதனை, விசாரணையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் ரூ.45 கோடி சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கே.பி.அன்பழகன் 11.32 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.45.20 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+