இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள்: எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் வாழ்த்து
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளுக்கு எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கிறிஸ்துவ மக்களுக்கு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமாக ஈஸ்டர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.
அன்பின் மகத்துவத்தை உணர்த்திய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகெங்கிலும் உள்ள கிறிஸ்த்துவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நாளை ஈஸ்டர் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுவதை அடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கிறிஸ்துவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த நன்னாளில், உலகில் அன்பும், சமாதானமும் தழைத்தோங்கிட, இயேசுபிரான் போதித்த நல்வழிப் பாதையில் மக்கள் அனைவரும் தியாக உணர்வோடும், சகோதரத்துவத்தோடும், மனித நேயம் கொண்டவர்களாய் வாழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு வாழ்த்துகள். இந்நாளில் ஒளிமயமான, இனிமையான வாழ்க்கை அமைய அனைத்து கிறிஸ்துவ மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications