ஏற்காடு இடைத்தேர்தல்: இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரசாரம் செய்யதடை
சேலம்: ஏற்காடு இடைத்தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள் காலை 10 மணிமுதல் 6 மணிவரை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி சேலம் கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மகரபூஷணம் வெளியிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகள்:
ஏற்காடு (எஸ்.டி) சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தல் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் உரிய அலுவலரின் அனுமதி இன்றி காலை 6 மணிக்கு முன்பும் இரவு 10 மணிக்கு பின்பும் வாகனங்களில் ஒலி பெருக்கி வைத்து பிரச்சாரம் செய்தல் அல்லது ஒலி பெருக்கியை ஒரே இடத்தில் கட்டுதல் கூடாது.
சைக்கிள் ரிக்ஷா ஒரு வாகனமாகும். அதனை பயன்படுத்தினாலும் வேட்பாளர் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.
வாகனத்தில் இதர பொருட்கள் ஒலி பெருக்கி ஆகியவற்றினை மோட்டார் வாகன சட்டத்திற்குட்பட்டு உள்ளூர் சட்ட திட்டங்களுக்குட்பட்டும் வைக்க அனுமதி உண்டு.
அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், வேட்பாளர்கள், அவரது முகவர்கள் மற்றும் பொதுமக்கள் வாகன தணிக்கையின் போது தொகை ரூ.50,000மும் அதற்கு மேலும் எடுத்துச் சென்றால் அது வாக்காளரை முறையற்ற விதத்தில் தூண்டும் நோக்கில் எடுத்து செல்வதாக கருதப்படும்.
எனவே, எடுத்துச் செல்லும் பணத்திற்கு தக்க ஆவண, ஆதாரங்கள், தணிக்கை அலுவலர்கள் சோதனையின் போது காண்பித்து தேவையான ஒத்துழைப்பு அளிக்குறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு எடுத்துச் செல்லும் பணத்திற்கு தகுந்த முகாந்திரம் இல்லையெனில், அவை தணிக்கைக் குழுவால் கைப்பற்றப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications