தேர்தல் செலவுகளை கண்காணிக்க வெளிமாநில பார்வையாளர்கள் வருகை: பிரவீண்குமார்
சென்னை: தேர்தல் செலவுகளை கண்காணிக்க வெளிமாநில பார்வையாளர்கள் வர இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரவீண்குமார் கூறியதாவது:
தமிழகத்தில் நடைபெறும் லோக்சபா தேர்தலுக்காக செலவீன பார்வையாளர்கள் 29-ந்தேதிக்கு முன்பு வந்துவிடுவார்கள். ஒரு தொகுதிக்கு 2 பேர் வீதம் மொத்தம் 78 பேர் வருகின்றனர். அவர்கள் அந்தந்த தொகுதிக்கான மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் பேசிவிட்டு, அங்கு நேரடியாக சென்றுவிடுவார்கள்.
அவர்களுக்கென்று தனி பி.எஸ்.என்.எல். எண் தரப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்படும். புகார்களை அவர்களிடமும் மக்கள் தெரிவிக்கலாம்.

திருவள்ளூர் தொகுதி
திருவள்ளூர் தொகுதிக்கு, மராட்டிய மாநிலத்தில் பணியாற்றும் அஜய் தேகே (கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பணி), மராட்டிய மாநிலம் அகிலேந்திர பிரதாப் யாதவ் (பூந்தமல்லியில் தேர்தல் பணி) ஆகியோர் செலவீன பார்வையாளராக வருகின்றனர்.

வடசென்னை, தென்சென்னை
அதுபோல், வடசென்னை தொகுதிக்கு ஆந்திராவைச் சேர்ந்த பி.ராஜாராம் (திருவொற்றியூர்), கர்நாடகாவை சேர்ந்த தல்லா வெங்கடரவி (பெரம்பூர்);
தென்சென்னை தொகுதிக்கு ஆந்திராவைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணா (விருகம்பாக்கம்), ஆந்திராவைச்சேர்ந்த ராஜீவ் பெஞ்வால் (சைதாப்பேட்டை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னை, ஸ்ரீ பெரும்புதூர்
மத்திய சென்னை தொகுதிக்கு ஆந்திராவைச்சேர்ந்த பி.சி.எஸ்.நாயக் (வில்லிவாக்கம்), ஆந்திராவைச்சேர்ந்த ராமகிருஷ்ண பண்டி (துறைமுகம்);
ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மராட்டிய மாநிலத்தைச்சேர்ந்த பரத் ஆர்.அந்தேல் (மதுரவாயல்), டெல்லியை சேர்ந்த பவானிசங்கர் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் தொகுதிக்கு ஆந்திராவை சேர்ந்த வி.கோபிநாத் (செங்கல்பட்டு), மராட்டிய மாநிலத்தை சேர்ந்த டி.பிரசாதராவ் (மதுராந்தகம்) ஆகியோர் செலவீன பார்வையாளராக வரவுள்ளனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி
நெல்லை நாடாளுமன்ற லோக்சபா தொகுதிக்கு தேர்தல் பார்வையாளராக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இந்திய சுங்கம், கலால் மற்றும் சேவை துறை அதிகாரி அஜய் பானிக் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள ஆலங்குளம், நெல்லை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகள் ஓதுக்கப்பட்டுள்ளன.

பார்வையாளர் விஜய்
பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி விஜய் என்பவருக்கு ஓதுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தொகுதிக்கு
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி சுஷாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு மகாராஷ்டிராவை சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி வாசிம் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி தொகுதிக்கு
தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துர் தொகுதிக்கு ஆந்திராவை சேர்ந்த மரியன்னா நியமிக்கப்பட்டுள்ளார். சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய சட்டமன்ற தொகுதி பார்வையாளராக கர்நாடாக மாநிலத்தை சேர்ந்த சேட்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் எத்தனை வாக்கு எந்திரங்கள் தேவைப்படும் என்பது உறுதி செய்யப்படும்.
தற்போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு எந்திரங்கள் கைவசம் உள்ளன. அதன் பிறகு அந்த எந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னங்கள் மற்றும் நோட்டா ஆகிய அம்சங்கள் அடங்கிய வாக்கு எந்திர சீட்டு அச்சடிக்கப்பட்டு, அந்த எந்திரங்களில் தேவைக்கு ஏற்ப ஒட்டப்படும்.

அதிகாரிகளுடன் ஆலோசனை
28-ந்தேதி (இன்று) தென்னிந்திய தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் கலந்தாலோசனை நடத்துகிறது. இந்த கூட்டம், காணொலி காட்சி மூலம் நடத்தப்படும். துணை கமிஷனர்கள் எங்களுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பார்கள் என்று பிரவீண்குமார் கூறினார்.

பணம் கொடுப்பது கண்காணிப்பு
வாக்குப்பதிவு வாக்காளர்களை கவர்வதற்காகவும், ஓட்டுக்காக அவர்களை வசப்படுத்தி கொள்வதற்காகவும் அரசியல் கட்சிகள் சார்பில் பணம் கொடுப்பது, மது சப்ளை செய்வது வழக்கம்.
வாக்கினை விலை கொடுத்து வாங்குவதை தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மது கடத்தலை தடுக்க
தமிழகத்தில் அதிக மது விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளை கண்காணிக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார். எனவே வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மதுவை புதுச்சேரியில் இருந்து கடத்தி கொண்டு வருவதற்கு சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக தகவல்கள் வந்தன.

45 சோதனைச் சாவடிகள்
புதுச்சேரியில் இருந்து மதுவை கடத்திக்கொண்டு வருவதை தடுப்பதற்காக 29 இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்திருந்தோம். தற்போது அதன் எண்ணிக்கையை 45-ஆக உயர்த்தி இருக்கிறோம். இதன் மூலம் புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து குறுக்கு வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக் கடை அடைப்பு
தமிழகத்தில் ஏப்ரல் 24-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் 22-ந்தேதி மாலை 6 மணியில் இருந்து அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அடைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் இருந்து ஏப்ரல் 24-ந்தேதி நள்ளிரவு வரை டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும்.

ஏப்ரல் 22 முதல் கடையடைப்பு
கடை அடைக்கப்படுவதை முன்னிட்டு, ஏப்ரல் 22-ந்தேதி 6 மணிக்கு டாஸ்மாக் கடைகளில் அதிக கூட்டம் கூடும் என்பதால், 22-ந்தேதி காலையில் இருந்தே கடைகளை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்களின் சங்கம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கையை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ளேன். அங்கிருந்து வரும் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
அதுபோல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மே 16-ந்தேதியன்று முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும்.

வேட்புமனு தாக்கல்
தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளர் நேரடியாக வரத்தேவையில்லை. முன்மொழிபவர் மூலமாக வேட்பு மனுக்களையும் உறுதிமொழி பத்திரத்தையும் தாக்கல் செய்யலாம்.
ஆனால் அந்த உறுதிமொழி பத்திரத்தில், மாஜிஸ்திரேட்டு அல்லது தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டிருப்பவர்களின் முன்னிலையில் வேட்பாளர் கையெழுத்து போட்டுவிட்டு, அதற்கான சான்றளிக்கப்பட்ட நகலை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பாளரை முன்மொழிபவர் தாக்கல் செய்ய வேண்டும்.

சிறையில் இருக்கும் வேட்பாளர்
ஜெயிலில் இருக்கும் வேட்பாளர், அங்குள்ள பொறுப்பு அதிகாரி முன்னிலையில் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து போடலாம். ஆஸ்பத்திரியில் இருப்பவர் டீன் போன்ற மூத்த டாக்டர்களின் முன்னிலையில் கையெழுத்திட்டுவிட்டு, சான்றளிக்கப்பட்ட நகலை முன்மொழிபவர் மூலமாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பிரவீண்குமார் கூறியுள்ளார்.

நாளை முதல் கண்காணிப்பு
கண்காணிப்பாளர்கள் மார்ச் 29 முதல் தொகுதிக்கு வருகின்றனர்.
இவர்கள் அந்தந்த பகுதிகளில் தங்கியிருந்து தேர்தல் செலவுகளை கண்காணிப்பர். இதனால் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் திகில் உள்ளனர்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications