கத்தை கத்தையாக பணத்துடன் பிடிபடும் தினகரன் அடியாட்கள்- ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து?
ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரனின் அடியாட்கள் கைது செய்யப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. இதையடுத்து ஆர்கே நகர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யலாம் என கூறப்படுகிறது.
சென்னை: வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரனின் அடியாட்கள் 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து அரவக்குறிச்சி தொகுதியைப் போல ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலும் ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதியில் வெல்ல வேண்டும்; அப்போதுதான் முதல்வர் நாற்காலியை கபளீகரம் செய்ய முடியும் என்பது தினகரனின் கணக்கு. ஆனால் தினகரன் ஜெயித்துவிட்டால் ஆட்டத்தை தாங்க முடியாதே என்பது அமைச்சர்களின் பலரது அண்ணம்.
இதனால் தினகரனுக்கு எதிராக ஆர்கே நகரில் உள்ளடி வேலைகள் ஜரூராக நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதனையெல்லாம் பணத்தை வாரி இறைத்து அசால்ட்டாக எதிர்கொண்டு வருகிறார் தினகரன்.

23 பேர் கைது
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக இதுவரை தினகரனின் அடியாட்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மொத்தம் ரூ. 70 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஐடியாக்கள்
என்னதான் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வுடன் இருந்தபோதும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை. தினகரனின் அடியாட்கள் ரூம்போட்டு யோசித்து புது புது ஐடியாக்கள் மூலம் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்.

தேர்தல் ரத்து?
இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் பணம் தொடர்ந்து பட்டுவாடா செய்த காரணத்தால் அத்தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்திருந்தது தேர்தல் ஆணையம்.

அதிர்ச்சியில் திமுக, ஓபிஎஸ் அதிமுக
இதே அடிப்படையில் ஆர்கே நகர் தொகுதியிலும் தேர்தலை ரத்து செய்யலாமா என்பது தேர்தல் ஆணைய வட்டாரங்கள் ஆலோசித்து வருகின்றனவாம். இதனால் திமுக, ஓபிஎஸ் அதிமுக ஆகியவை கடும் அதிர்ச்சியடைந்துள்ளன என கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications