எந்த நேரத்திலும் இரட்டை இலை சின்னத்தின் தேர்தல் ஆணைய தீர்ப்பு வெளியாகலாம்? அதிமுகவில் ‘பரபர’
இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பை தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் வெளியிடக் கூடும் என கூறப்படுகிறது.
சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் தீர்ப்பளிக்கக் கூடும் என கூறப்படுகிறது.
அதிமுகவில் ஓபிஎஸ் முதலில் கலகக் குரல் எழுப்பி இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினார். இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
இதன் பின்னர் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. உண்மையான அதிமுக தாங்கள்தான் என்றும் தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் வாதிட்டனர்.

தினகரன் ஷாக் வாதம்
அதேநேரத்தில் தினகரன் தரப்போ, தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்; இல்லையெனில் சின்னத்தையே முடக்கி வைக்க வேண்டும் என தடாலடி வாதத்தை முன்வைத்தது.

நிதிஷ்குமாருக்கு சாதகமான தீர்ப்பு
இவ்விருவாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படமால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ஐக்கிய ஜனதா தள் கட்சியும் அதன் சின்னமுமாம அம்புவும் நிதிஷ்குமாருக்குதான் என தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இரட்டை இலை யாருக்கு?
இதேபோல் இரட்டை இலை சின்னம் வழக்கிலும் தேர்தல் ஆணையம் நேற்றே தீர்ப்பை அறிவிக்கும் என சில தகவல்கள் தெரிவித்திருந்தன. ஆனால் தேர்தல் ஆணையம் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

சூடாகும் அரசியல் களம்
இதனால் எந்த நிமிடத்திலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இத்தீர்பு வெளியான பின்னர் தமிழக அரசியல் களம் மேலும் பரபரக்கும்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications