தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: கூடுதலாக 2 மணிநேரம் வாக்குப்பதிவு நடத்தும் தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கூடுதலாக 2 மணி நேரம் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 16ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி துவங்குகிறது. தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் மற்றும் வெளிமாநில போலீசார் வரவழைக்கப்படுகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள் அளிப்பதை தடுக்க பறக்கும் படை அமைத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில் வரும் மே மாதம் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதாவது கூடுதலாக 2 மணிநேரம் வாக்குப்பதிவு நடைபெறும். மே மாதம் அக்னி நட்சத்திரன்தின்போது வெயில் கொளுத்தும். அதை மனதில் வைத்து தான் வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்து கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் வரும் 4ம் தேதி காலை 7 மணி முதல் 16ம் தேதி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications