சரக்கு எவ்வளவு வருது, எவ்வளவு போகுது... ஸ்ரீரங்கம் டாஸ்மாக் கடைகளில் தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை ஒருபக்கம் விதித்து வருகிறது. மறுபக்கம் பல நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டு வருகிறது. அதில் ஒன்றாக தொகுதிக்குட்பட்ட 22 டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் செலவீனப் பார்வையாளரான ஸ்ரீதர் டோஹ்ரா கூறுகையில், ஸ்ரீரங்கம் தொகுதிக்குள் 22 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளின் அன்றாட இருப்புப் பதிவேடு மதுபான வகைகளின் ரகம் வாரியாக பதிந்து பராமரித்திட வேண்டும். சராசரி விற்பனையை விட கூடுதல் விற்பனை எந்தெந்தக் கடைகளில் நடைபெறுகிறது என்பதைக் கண்டறிந்து கண்காணித்திட வேண்டும்.

மதுபானக்கடைகளில் யாரேனும் சலுகை சீட்டுகள், அடையாள சீட்டுகளைக் கொடுத்தாலோ அல்லது மொத்தமாகவோ மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறும் விற்பனையாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
இரவு 10 மணிக்கு மேல் மது அருந்தும் எந்த பார்களும் இயங்கக்கூடாது. வெளி மாநில மதுபானங்கள் மாவட்டத்திற்குள் கொண்டு வருவதை தடை செய்திட அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறையினர் இரவும், பகலும் எந்நேரமும் சோதனை மேற்கொள்ள வேண்டும். மதுபானங்கள் மொத்தம் இருப்பு வைத்துள்ள குடோனில் சிசிடி.வி. மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications