தமிழக-கேரள எல்லையில் மினிலாரியில் இருந்து ரூ. 3 லட்சம் பறிமுதல்
நெல்லை: தமிழக-கேரள எல்லையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவசங்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், வேட்டி, சேலைகளை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக கேரள எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை கோட்டைவாசல் பகுதியில் தமிழக தேர்தல் பறக்கும்படை அதிகாரி கணபதி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம் கூடைவாசலில் இருந்து தமிழகம் நோக்கி வேகமாக வந்த மினி லாரியை அக்குழுவினர் நிறுத்தி சோதனை நடத்தினர்.
லாரியில் செங்கோட்டை அருகே உள்ள மேக்கரையில் இருந்து மரவள்ளி கிழங்கு வாங்க ராய் என்பவர் ரூ. 2 லட்சத்து 99 ஆயிரத்தி 700 ரொக்கத்தை எந்த ஆவணங்களும் இல்லாமல் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மினி லாரி செங்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்து தாசில்தார் செல்வநாயகத்திடம் பணமும், வாகனமும் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications