அவங்களுக்கெல்லாம் இந்த பரமாத்தாளைப் பார்த்தாவது புத்தி வரட்டும்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை இலக்காகக் கொண்டு என்னதான் தேர்தல் ஆணையம் தீயாக வேலை செய்தாலும், பொறுப்பற்ற பல வாக்காளர்களால் அது நிறைவேறாமல் போய் விட்டது.
அதை விடக் கொடுமையாக கடந்த ஆண்டு பதிவான வாக்குகள் கூட இந்த முறை பதிவாகவில்லை. அதுதான தேர்தல் ஆணையத்தையும் விரக்திக்குள்ளாக்கியுள்ளது.
ஆனால் வாக்குப் பதிவை வலியுறுத்தி அது செய்த வேலைகளை நிச்சயம் பாராட்ட வேண்டும். எடுத்த முயற்சிகள் எக்கச்சக்கம். அதிலும் டிவிட்டரில் அது நேற்று கலக்கி விட்டது. அதிலிருந்து சில...
|
தலையில் மண்ணைப் போட்டுக்காதீங்க
இந்தப் படத்தை வைத்துப் பலரும் பல விதமாக சமூக வலைதளங்களில் வார்த்தைகளில் விளையாடி வந்த நிலையில் ஓட்டுப் போடாதவர்களுக்காக இந்தப் படத்தைப் போட்டு உஷார்படுத்தியது தேர்தல் ஆணையம்.
|
ஹேப்பி ஓட்டிங்.. ஹேப்பி வெட்டிங்!
அதேபோல கல்யாணத்தை முடித்துக் கொண்டு வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதிகள் குறித்த செய்தியை ரீட்வீட் செய்து அவர்களுக்கு வாழ்த்தையும் கூற தவறவில்லை தேர்தல் ஆணையம்.
|
ஆக்சிடன்டேஸ்வரிக்கு ஒரு தேங்க்ஸ் போடு!
வாக்காளர்களுக்கு நன்றி சொல்லவும் தேர்தல் ஆணையம் தவறவில்லை. ஆக்சிடன்டேஸ்வரி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தவருக்கு தேங்கஸ் சொன்னது தேர்தல் ஆணையம்.
|
லீவு தராட்டி சொல்லுங்க பாஸ்!
இடையே நீங்க ஓட்டுப் போட கம்பெனியில் லீவு தராட்டி எங்க கிட்ட சொல்லுங்க, நாங்க பாத்துக்கிறோம் என்ற டிவிட்டையும் தட்டி விட்டது தேர்தல் ஆணையம்.
|
குட்டீஸ் உங்களுக்காக கிரீச் இருக்கு பாருங்க!
வாக்களிக்க பலரும் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அந்தக் குழந்தைகளுக்காக விளையாடுமிடத்தையும் பாதுகாப்பு இடத்தையும் கூட தேர்தல் ஆணையம் சில இடங்களில் செய்து வைத்திருந்தது.
|
கிளாப் கிளாப் கிளாப்!
திருப்பூர் மாவட்டத்தில் கல்யாணம் ஆன கையோடு வாக்களிக்க வந்த மணப்பெண்ணுக்கும், மணமகனுக்கும் கிளாப் கிளாப் கிளாப் என கரகோஷம் எழுப்பியும் பாராட்டியது தேர்தல் ஆணையம்!
|
"டிடி"க்கும் ஒரு டேங்ஸ்!
டிவி காம்பயர் திவ்யதர்ஷினி (அதாங்க டிடி) தான் வாக்களித்ததை டிவிட் செய்திருந்தார். அவருக்கு ஒரு நன்றி சொல்லி அதை ரீட்விட் செய்திருந்தது தேர்தல் ஆணையம்.
|
இதுதான் அல்டிமேட்!
ஆனால் எல்லாப் புகைப்படங்களையும் தூக்கிச் சாப்பிட்டது இந்தப் படம்தான். 95 வயதான பரமாத்தாள் என்ற பாட்டி, ஆலங்குளம் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட்டு விட்டு தனது மை வைத்த விரலை பெருமையுடன் காட்டிய புகைப்படம் மிகப் பெரிய செய்தியை உலகுக்கு எடுத்துக காட்டுவதாக அமைந்தது.. அந்த செய்தியைப் போட்டு பாராட்டியிருந்தது தேர்தல் ஆணையம்.
வாய்ப்பு இருந்தும் ஓட்டுப் போட முயற்சிக்காத, விரும்பாத சோம்பேறிகளுக்கு பரமாத்தாளைப் பார்த்தாவது புத்தி வரட்டும்!.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications