மீனவர்கள் மூலம் "வாக்கு வலை" வீசும் தேர்தல் ஆணையம்!
தூத்துக்குடி: தமிழகத்தில் நூறு சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறது. பல விதங்களில் அதன் பிரசாரம் நடந்து வரும் நிலையில் தற்போது மீனவர்கள் மூலமும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மே 16ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இது தொடர்பாக பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகள் மூலமும், கடைகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் மூலமும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கடலுக்குள் நிறுத்தப்பட்டிருந்த நான்கு படகுகளில் மே 16ம் தேதி் 100 சதவீத வாக்களிக்க தயாராகுங்கள் என்ற பாதகையை மீனவர்கள் ஏந்தி நின்றனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தூத்துக்குடி தொகுதி தேர்தல் அலுவலர் கோபால் சுந்தர்ராஜ் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தாசில்தார் சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி முகாமில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து சப் கலெக்டர் கோபால் சுந்தர்ராஜன் விளக்கமளித்தார். தேர்தல் பணியாளர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இது போல் பலவேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அதிரடியாக தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications