சட்டசபை தேர்தலை நடுநிலையுடன் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் - நஜீம் ஜைதி
சென்னை: சட்டசபை தேர்தலை நடுநிலையுடன் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார். எந்த புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், தேர்தலில் பணப்புழக்கத்தை தடுக்கவும் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்படுவதையும், ஓடுக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதையும் உறுதி செய்யவும் கட்சிகள் கோரிக்கைவிடுத்தள்ளதாக தெரிவித்தார். தேர்தலின் போது வெப் கேமரா, சிசிடிவி உள்ளிட்ட கண்காணிப்பு சாதனங்களை பொருத்தவும் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்,
தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்படுவதையும், ஓடுக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதையும் உறுதி செய்யவும் கட்சிகள் கோரிக்கைவிடுத்தள்ளதாக ஜைதி தெரிவித்தார். தேர்தலின் போது வெப் கேமரா, சிசிடிவி உள்ளிட்ட கண்காணிப்பு சாதனங்களை பொருத்தவும் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார். வாக்குப் பதிவு நாளன்று பொது விடுமுறை அறிவிக்கவும் கட்சிகள் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும் நலிவுற்ற பிரிவினர் வாழும் இடங்களில் பிரத்யேக வாக்குச்சாவடி அமைக்கவும் கோரப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க 17 லட்சம் விண்ணபங்கள் வந்ததாகவும் அதில் 16 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் மொத்தம் 5.79 கோடி வாக்காளர்கள் இருப்பதாக கூறிய அவர், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழையை நீக்க பிப்ரவரி 15 முதல் 29ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும் நசீம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 65,616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று கூறிய அவர், வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். வாக்குச்சாவடி மையங்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் திருப்தியளிக்கின்றன. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறினார்.
20 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று கூறிய நஜீம் ஜைதி, வாக்குப்பதிவை அதிகரிக்க சமூக வலைத்தளங்களின் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications