அரெஸ்ட் பண்ணுங்க சார்.. லஞ்ச ஒழிப்பு துறையினர் மீது குற்றச்சாட்டு! டிஜிபியிடம் அமலாக்கத்துறை புகார்
சென்னை: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரெய்டு நடத்திய விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீது அமலாக்கத்துறை புகார் அளித்திருக்கிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்ட புகாரில், மதுரையில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார். சுரேஷ் பாபு மீதான வழக்கு ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில், இதே வழக்கை பிரதமர் அலுவலகம் மீண்டும் விசாரிக்க இருப்பதாகவும் கூறி இதிலிருந்து தப்பிக்க ரூ.2 கோடி வரை அங்கித் திவாரி லஞ்சம் கேட்டிருக்கிறார்.

இதனையடுத்து மருத்துவர் தமிழ்நாடு லஞ்ச ஒழப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில், லஞ்சம் பெற்றதாக அங்கித் திவாரி கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. எனவே இது தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் உள்ள அங்கித் திவாரியின் அறையை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முயன்றனர்.
ஆனால் இதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த விவரங்களை காண்பித்து ரெய்டு நடத்தியே ஆக வேண்டும் என்று உறுதியாக கூறினர். இதனையடுத்து ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. சுமார் 13 மணி நேரம் நடைபெற்ற ரெய்டில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து அங்கித் திவாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய வரலாற்றில் மத்திய விசாரணை அமைப்பின் அலுவலகத்தில் மாநில விசாரணை அமைப்பு ரெய்டு மேற்கொள்வது இதுவே முதல்முறை என்றும் சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீது அமலாக்கத்துறை புகார் அளித்திருக்கிறது.
சென்னையில் டிஜிபியிடம் புகார் அளித்துள்ள அமலாக்கத்துறை, "டிச.1ம் தேதி மதியம் 1.15 மணியளவில் தங்களை ஐபி அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு இரண்டு நபர்கள் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நுழைந்தனர். அவர்களிடம் அடையாள அட்டையை கேட்டபோது அங்கிருந்து நழுவிவிட்டனர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து லஞ்ச ஒழிப்புத்துறையை சேர்ந்தவர்கள் என கூறிக்கொண்டு 35 பேர் கும்பலாக அலுவலகத்திற்குள் புகுந்தனர்.
இவர்கள் அடையாள அட்டையை காட்டவில்லை. அதில் சத்தியசீலன் என்பவர் மட்டும் லஞ்ச ஒழிப்பு துறையின் மதுரை டிஎஸ்பி என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். மற்றவர்கள் யாரும் சீருடை அணிந்திருக்கவில்லை. மட்டுமல்லாது பேட்ச் ஏதும் அவர்கள் உடையில் இல்லை. அவர்கள் அனைவரும் அன்று மதியம் தொடங்கி அடுத்த நாள் காலை வரை எங்களது அலுவலகத்திலேயே தங்கினர்.
இப்படியாக மதுரை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை சட்ட விரோதமானது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எனக்கூறி மதுரை மண்டல அலுவலகத்திற்குள் நுழைந்தவர்கள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். அனுமதியின்றி அலுவலகத்திற்குள் புகுந்த 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications