இரட்டை இலையைப் பெற லஞ்சம். தினகரன் மீது பாய்ந்தது அமலாக்கப் பிரிவு வழக்கு!
சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னை: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க ஹவாலா பண மோசடியில் டிடிவி தினகரன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற சுமார் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்ட வழக்கில், இது வரை 1 கோடியே 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 17ம் தேதி இரவு டெல்லி தெற்கு பகுதியில் பிடிபட்ட புரோக்கர் சுகேஷ் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்துடன் டெல்லி குற்றப்பிரிவு போலீசிடம் பிடிபட்டார். இவர் அளித்த தகவலின்படி லஞ்ச பேர வழக்கில் டிடிவி தினரகன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 நாட்கள் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், இருவரும் 15 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஹவாலா இடைத்தரகர் நரேஷ் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். நரேஷிடம் போலீஸ் விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று காலையில் அவர் மறைத்து வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications