ஆலோசனைக் கூட்டத்திற்கு எம்எல்ஏக்கள் ஏன் வரலை? களமிறங்கிய எடப்பாடி டீம்
இன்றைக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காத எம்எல்ஏக்களைப் பற்றி தகவல் சேகரிக்க சொல்லியிருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடர்பாக ஆலோசிக்க இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல எம்எல்ஏக்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர். இதற்கான காரணம் பற்றி விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
கடந்த வாரம் திங்கட்கிழமை அதிமுக தலைமை அலுவலகம் பரபரப்படைந்தது. அது இணைப்புக்கான பரபரப்பு இந்த வாரம் இணைப்புக்குப் பிறகு நடைபெற்ற கூட்டத்திற்காக மீண்டும் பரபரப்படைந்தது.

இந்தக் கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில் பலரது தலையை காணவில்லை.
33 எம்எல்ஏக்கள், 35 அமைச்சர்கள் என மொத்தம் 68 பேர் பங்கேற்றனர். கூட்டணிக் கட்சியைச்சேர்ந்த 3 பேருடன் சேர்த்து 135 பேர் அதிமுகவில் இருக்கின்றனர்.
அப்படியானால் மீதி 63 பேர் எங்கே போனார்கள் என்ற கேள்வி வந்தது. இதில் 21 பேர் தினகரன் ஆதரவாளர்கள் என்றாலும் மீதமுள்ளவர்கள் ஏன் வரவில்லை என கோபமாக கேட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி. எல்லாருக்குமே சில நாட்களுக்கு முன்பே தகவல் சொல்லியும் பங்கேற்காத காரணம் ஏன் என்று விசாரிங்க என அமைச்சர் ஜெயகுமாரிடம் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. அமைச்சர் ஜெயகுமாரும் சத்தமில்லாமல் விசாரணையைத் தொடங்கி விட்டாராம்.
விசாரணையில் என்னென்ன அதிர்ச்சிகள் வெளியாகப் போகிறதோ எல்லாம் டிடிவி தினகரனுக்கே வெளிச்சம்.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications