ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட நிரஞ்சன் மார்டி... முக்கிய துறைகளை வாரி வழங்கும் எடப்பாடி!
ஜெ. ஆட்சியில் உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டியிடம் இருந்து அப்பதவி பறிக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி அவருக்கு பல்வேறு பொறுப்புகள் வழங்கியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உள்துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டியிடம் இருந்து அப்பதவி பறிக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவருக்கு பல்வேறு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆர்.கே. நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா புகாருக்கு பிறகு அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு ரூ.89 கோடி ரொக்கமும், ஆவணங்களு்ம கைப்பற்றப்பட்டன.

வருமான வரித்துறை பிடியில்...
இந்நிலையில் ரெய்டு, விசாரணை என்று வருமான வரித்துறையின் பிடியில் விஜயபாஸ்கர் இருந்தார். அவரது மனைவி ரம்யாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனால் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசு எடப்பாடி அரசை நிர்பந்தித்தது.

எடப்பாடிக்கு மிரட்டல்
ஆனால் என்னைபதவியில் இருந்து நீக்கினால் உங்கள் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிவிடுவேன் என்று விஜயபாஸ்கர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுத்ததால் அவர் மெல்லவும் முடியாமல் , விழுங்கவும் முடியாமல் தவித்து வந்தார். இதனிடையே சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ரூ.300 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், மூத்த அதிகாரிகளின் பெயர்கள் உள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித்துறை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடம் பட்டியலை அளித்தது.

நடவடிக்கை எடுக்க ஆயத்தம்
இதையடுத்து கிரிஜா வைத்தியநாதனும் அந்த பட்டியலில் உள்ளோர் மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தமான நிலையில் தற்போது அவர் வசம் இருந்த லஞ்ச ஒழிப்பு ஆணையர் பதவி பறிக்கப்பட்டு உள்துறைச் செயலாளராக உள்ள நிரஞ்சன் மார்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான கோப்புகள் வெள்ளிக்கிழமை தயார் செய்யப்பட்டு விட்டதும் தெரியவந்துள்ளது.

யார் இந்த நிரஞ்சன் மார்டி?
கடந்த 2013-ஆம் ஆண்டு உள்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி நிரஞ்சன் மார்டி, ஜெயலலிதாவிடம் அதிருப்தியை சம்பாதித்தார். இதனால் அவர் அப்பொறுப்பிலிருந்து இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அப்பதவிக்கு அபூர்வ வர்மாவை ஜெயலலிதா நியமித்தார்.

குட் வில் புக்
நான்கு ஆண்டுகளுக்கு மேல் அப்பதவியில் இருந்த அபூர்வ வர்மா, ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் ஆளுங்கட்சியினரின் பேச்சைக்கூட சில நேரங்களில் கேட்காமல் இருந்தார். தன்னிச்சையாக செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு இருந்தபோதிலும் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்திருந்த அவரை அமைச்சர்களால்கூட எதுவும் செய்யமுடியவில்லை.

எடப்பாடி பரிந்துரை
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதல்வராக பதவியேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட நிரஞ்சன் மார்டிக்கு பல்வேறு முக்கிய துறைகளை வழங்கினார். தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவியேற்றதும் முதல் வேலையாக அபூர்வ வர்மாவிடம் இருந்த உள்துறை செயலாளர் பதவியை பறித்து நிரஞ்சனிடம் வழங்கினார் எடப்பாடி. தற்போது லஞ்ச ஒழிப்பு துறை ஆணையர் பதவியும் நிரஞ்சன் மார்டிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications