எடப்பாடியார் நாளைக்கு வரைக்கும் முதல்வரா இருக்காரான்னு பாக்கலாம்... பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நாளை வரே நீடிப்பதே கேள்விக் குறிதான் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவை: தமிழகத்தில் மீண்டும் குடும்ப ஆட்சி வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நீடிப்பாரே என்பது கேள்விக்குறிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் மட்டும் மூன்று முதல்வர்கள் மாறியுள்ளனர். கடந்த நாட்களுக்கு மேலாக நடந்து வந்த முதல்வர் பதவிக்கான போட்டி நேற்று முடிவுக்கு வந்தது.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். அவரது தலைமையில் 31 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

நாளை சட்டசபைக் கூட்டம்
நாளை கூடவுள்ள சட்டசபைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை
அப்போது அவர் கூறியதாவது, கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்றுவந்த திராவிடக் கட்சிகளின் சகாப்தம் முடிவடைந்து. அதிமுக ஆட்சியில் காவல்துறையில் சுதந்திரமாக செயல்படவில்லை.

நாளை வரை நீடிப்பாரா?
முதல்வராக பதவியேற்றுள்ள எடப்படி பழனிச்சாமியை சுதந்திரமாக செயல்பட விடமாட்டார்கள். மேலும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நாளை வரே நீடிப்பதே கேள்விக் குறிதான்.

குடும்ப ஆட்சி வேண்டாம்
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அனைத்து பணிகளையும் பாஜக மேற்கொள்ளும். தமிழகத்தில் குடும்ப ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டாம். இவ்வாறு மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்தினர் ஆட்சி
அதிமுக பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது அக்காள் மகனான டிடிவி.தினகரனை சசிகலா துணைபொதுச்செயலாளராக நியமித்தார். தற்போது சசிகலா தரப்பின் பிடியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியே முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

சசி குடும்பத்தின் பிடியில் ஆட்சி
இந்நிலையில் அதிமுக அரசு சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதை சூசகமாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சசிகலா குடும்பத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அமைச்சரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications