பேச்சுவார்த்தைக்கு திறந்த மனதோடு காத்திருக்கிறோம் - எடப்பாடி பழனிச்சாமி
ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு திறந்த மனதோடு காத்திருக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைய பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் திறந்த மனதோடு காத்திருக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. குடிநீர் பிரச்சினை தீர்க்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சியிலும் தமிழகத்தில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது.
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்ற பெயரில் சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு வந்தால் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் திறந்த மனதோடு காத்திருக்கிறோம் என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், திமுக நினைத்திருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே அதிமுக அரசு மீது எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றனர். காவிரி விவகாரத்தில் விரைவில் சாதகமான தீர்ப்பை பெறுவோம். அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக செயல்பட்டு வருகிறது என்றார்.
-
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications