எடப்பாடி சந்தோசமாக இருக்கும் நேரத்தில்.. சட்டென அதிமுக காலை சுற்றிய "பழைய பாம்பு".. ஆ.. தெறிக்குதே!
சென்னை: உட்கட்சி மோதல் கிட்டத்தட்ட அதிமுகவில் நிறைவிற்கு வந்துள்ள நிலையில் பழைய பாம்பு ஒன்று அதிமுகவின் கால்களை சுற்ற தொடங்கி உள்ளது. ஆளும் திமுக அரசு வரும் நாட்களில் இது தொடர்பாக தீவிர வழக்குகளை பதியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரின் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது. முக்கியமாக மாஜி அமைச்சர்கள் பலர் வரிசையாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வளையத்தில் சிக்கி வருகிறார்கள்.
முதலில் அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து வரிசையாக எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, சி விஜயபாஸ்கர், என்று பலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அதிமுகவில் எடப்பாடி ஆதரவாளர்களாக இருக்கும் நிர்வாகிகள் அடுத்தடுத்து குறி வைக்கப்பட்டு உள்ளனர். கோடநாடு வழக்கிலும் விசாரணை சூடு பிடித்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி தரப்பு குறி வைக்கப்பட்டுள்ளதோ என்று கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் கோடநாடு வழக்கில் தற்போது விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இது தொடர்பாக மற்ற மாநிலங்களில் விசாரணை நடத்துவது மட்டுமின்றி எடப்பாடியில் உள்ள ஜோசியர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்துவதும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஆன நிலையில்.. அவர் உட்கட்சி மோதலில் வெற்றிபெற்று சந்தோசமாக இருக்கும் நேரத்தில்.. அவரை ஆளும் திமுக தரப்பு குறி வைக்கிறதோ என்ற விவாதம் எடுத்துள்ளது. முக்கியமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோடநாடு வழக்கு மற்றும் அவருக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் தூசி தட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பயன்படுத்தி எடப்பாடி மற்றும் அதிமுகவை ஆளும் திமுக தரப்பு முடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில்தான் தற்போது பழைய பாம்பு ஒன்று அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி காலை சுற்ற தொடங்கி உள்ளது.
எடப்பாடி கால் - பழைய பாம்பு:கடந்த 2016-2021 ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து அதிமுக பல்வேறு டெண்டர் முறைகளை செய்து உள்ளதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக தற்போதைய ஆட்சியில் வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
முக்கியமாக பல்வேறு டெண்டர் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன. முக்கியமாக அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2018லேயே ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அந்த வகையில்தான் சமீபத்தில் அதிமுகவின் முறைகேடுகள் தொடர்பாக சிஏஜி அறிக்கை வெளியிடப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது.
ஒரே IP addressல் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளன. அதை இவர்கள் ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.
டைப்பிஸ்ட்டுகள், இளநிலை பொறியாளர்களை கொண்டு டெண்டர்கள் விடப்பட்டு உள்ளன. அதாவது அனுபவம் வாய்ந்தவர்களை வைத்து டெண்டர் விடாமல் மேம்போக்காக டெண்டர் விட்டு உள்ளனர்.
ஒரே கம்பெனிகள் டெண்டர்களில் கலந்து கொண்ட போது வேறு கம்பெனிகள் அதில் கலந்து கொள்ளவில்லை.
சிலர் டெண்டருக்கு நெடுஞ்சாலைத்துறையின் கம்ப்யூட்டரில் இருந்தே விண்ணப்பம் செய்துள்ளனர். இதன் அர்த்தம் உள்ளே இருந்து கொண்ட சிலர் டெண்டருக்கு விண்ணப்பம் செய்து உள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் வேறு வேறு நிறுவனங்களுக்கு ஒரே சமயத்தில் டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது.

இவர்கள் லாபத்தை பங்கிட்டுக்கொள்ள வர்த்தக குழு அமைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இப்படிப்பட்ட விடப்பட்ட ஒப்பந்தங்களின் மதிப்பு 14 கோடி ரூபாய் என்றும், டெண்டர்களின் மதிப்பு 15 கோடி ரூபாய் என்றும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல் 51 கோடி ரூபாய் வரை பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் இந்த சிஏஜி அறிக்கை மூலம், கடந்த அதிமுக ஆட்சியில் 5 லட்சத்து 9 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்து உள்ளது.
முறைகேடாக 3,354 வீடுகள் அதிமுக ஆட்சியில் தகுதியே இல்லாத பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளதை சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது.
இதெல்லாம் போக அமலாக்கத்துறை நடத்திய ஆய்வு ஒன்றில் அதிமுக ஆட்சியில் மின்சாரத்திற்காக நிலக்கரியை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிலக்கரிகொண்டு வருவதில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 1,267 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில் ஊழல் எப்படி தலைவிரித்து ஆடியது என்பதை சிஏஜி தணிக்கை அறிக்கையில் விளக்கி உள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் மெகா ஊழலை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளதால் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications