எடப்பாடி அரசு கவிழும், ஓபிஎஸ், ஈபிஎஸை தவிர அனைவரும் அமமுகவில் சேர்வார்கள்.. அடித்து சொல்லும் டிடிவி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், ஈபிஎஸை தவிர மற்ற அனைவரும் அமமுகவில் சேருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் இன்று நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் டிடிவி தினகரன் பங்கேற்கிறார். இதற்காக நேற்று தூத்துக்குடி சென்ற அவர் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய மாநில அரசுகளை அவர் கடுமையாக விளாசினார்.

தோல்வி
அவர் பேசியதாவது, மத்திய அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளது. இதே கருத்தை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கூறி உள்ளது.

கொள்கை முடிவு
தமிழகத்தில் தாமிர உற்பத்தி ஆலை வேண்டாம் என்று மாநில அரசு கொள்கை முடிவு எடுத்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியும்.

மோசமான ஆட்சி
ஸ்டெர்லைட் ஆலையை கொல்லைப்புறமாக திறக்க முயற்சி நடக்கிறது. மோசமான ஆட்சியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

நல்ல தீர்ப்பு வரும்
மக்கள் விரும்பாத, லஞ்சம், ஊழல் நிறைந்த ஆட்சி நடைபெறுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் சுப்ரீம் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கும்.

எடப்பாடி அரசு கவிழும்
பின்னர் சட்டமன்றத்தில் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கவிழும்.

அமமுகவில் ஒரு கோடி பேர்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரித்து உள்ளது. வருகிற 15-ந் தேதிக்குள் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

எங்களுடன் சேர்கிறார்கள்
அ.தி.மு.க.வில் இருந்து ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள் விலகி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேர்ந்து வருகிறார்கள். எனவே அ.தி.மு.க.வில் நாங்கள் சேர வேண்டிய அவசியம் இல்லை.

ஓபிஎஸ், ஈபிஎஸை தவிர
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலரை தவிர மற்றவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேரலாம். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications