For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீர்ப்பு இருக்கட்டும்.. பாஜகவின் உடும்பு பிடியில் எடப்பாடி.. பெரிய ‘செக்’.. விளக்கும் எக்ஸ்பர்ட்!

Google Oneindia Tamil News

சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு தற்போது வந்திருந்தாலும், இன்னொரு வகையில் ஈபிஎஸ் பாஜகவிடம் வலுவாகச் சிக்கிக் கொண்டிருக்கிறார் என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. ஓபிஎஸ் அணி தொடர்ந்த வழக்குகளை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்.

“என்னை கேட்காம..” ஓபிஎஸ் ஆக்‌ஷனுக்கு உடனடி கவுன்ட்டர்.. எடப்பாடி தரப்பில் கேவியட் மனு! செம ஸ்பீடு! “என்னை கேட்காம..” ஓபிஎஸ் ஆக்‌ஷனுக்கு உடனடி கவுன்ட்டர்.. எடப்பாடி தரப்பில் கேவியட் மனு! செம ஸ்பீடு!

தொடர்ச்சியாக, ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவு ஏற்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி கையில் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்கிறார் ரவீந்திரன் துரைசாமி. அதிமுகவில் நடைபெறும் சட்டப் போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈபிஎஸ் கை ஓங்கி வரும் நிலையில், தனது பார்வையை முன்வைக்கிறார்.

மேட்டரே இல்லை

மேட்டரே இல்லை

ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், அதிமுக வழக்கு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்திருப்பதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. சின்னம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியால் சான்ஸை எடுக்க முடியவில்லை. சான்ஸ் எடுப்பது அரசியலில் ஒரு முக்கியமான புள்ளி. 2009ல் அதிமுக + விஜயகாந்த் கூட்டணி அமைந்தால் 40 சீட்டும் போய்விடும், ராமதாஸ் அதிமுகவுடன் சேர்ந்தால் வடக்கில் மட்டும் தான் சில தொகுதிகளில் பாதிப்பு ஏற்படும், தேமுதிக - அதிமுக கூட்டணி அமையாது என்ற புள்ளியில் திமுகவால் சான்ஸ் எடுக்க முடியாது என கருணாநிதியிடம் விவாதித்தேன். அதிமுக பக்கம் பாமகவை தள்ளிவிட்டு, ராமதாஸை ஜீரோ ஆக்கப்பட்டார். தேமுதிக + அதிமுக சேராது என்ற புள்ளியிலேயே கருணாநிதி இருந்திருந்தால் அதிமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும். அந்த புள்ளி தான் முக்கியமான புள்ளி என்கிறார்.

முடக்கும் களம்

முடக்கும் களம்

அதுபோல் இரட்டை இலை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியால் சான்ஸ் எடுக்க முடியாது. 2017ல் கடைசி நிமிடத்தில் சசிகலா + எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் + கேபி முனுசாமி இந்த 2 டீமுக்குள் ஏற்பட்ட மோதலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு ஆர்கே நகரில், ஒருவருக்கு இரட்டை மின் விளக்கும், ஒருவருக்கு தொப்பியும் வழங்கியது தேர்தல் ஆணையம். அதேபோல, மகாராஷ்டிராவில் அந்தேரி கிழக்கில் கடைசி நிமிடத்தில் சிவசேனா சின்னம் முடக்கப்பட்டு இரு தரப்புக்கும் வெவ்வேறு சின்னம் வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று பாஜக தீர்மானித்து விட்டால் சின்னத்தை முடக்கும் களமாக 2024 நாடாளுமன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் ஃபிக்ஸ் செய்யக்கூடும் என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.

சான்ஸ் எடுக்க முடியாது

சான்ஸ் எடுக்க முடியாது

மேலும், தேர்தல் ஆணையத்தில் இப்போது வரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றுதான் இருக்கிறது. இப்போது தீர்ப்பு ஈபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்திருந்தாலும், தொடர்ந்து கோர்ட்டில் வழக்குகள் தொடர்கிறது. இன்னும் பிரதான வழக்கு நிலுவையில் தான் இருக்கிறது. தொடர்ந்து ஓபிஎஸ் வழக்கை நடத்துவார். எனவே, சின்னம் மேட்டரில் எடப்பாடி பழனிசாமியால் சான்ஸ் எடுக்கவே முடியாது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக பாமகவின் அன்புமணி அறிக்கை விடுகிறார். திமுக + காங்கிரஸ் கூட்டணியில் பாமக வந்தால் லாபம் என்ற நிலையில் இருக்கின்றனர். அதை நோக்கி அன்புமணி ராமதாஸ் நகர்கிறார்.

ராகுல் மேட்டரில் ஈபிஎஸ் கப்சிப்

ராகுல் மேட்டரில் ஈபிஎஸ் கப்சிப்

எடப்பாடி பழனிசாமி அணியினரும், இங்கு காங்கிரஸ் கூட்டணியே ஜெயிக்கும் என்று கருதுகிறது. ராகுல் காந்திக்கு ஆதரவாக அறிக்கை விட வேண்டும் என்ற எண்ணம் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, சிவி சண்முகம், தமிழ்மகன் உசேன், செங்கோட்டையன், வைகைச்செல்வன் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் சுனில் கனுகோலு அதற்கான மூவ்களையும் செய்து வருகிறார். 2009ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தோற்றோம், 2021ல் கூட்டணி அமைத்ததால் ஆட்சியை இழந்தோம் என்ற கணக்கு ஈபிஎஸ்ஸுக்கு இருக்கிறது. ஆனால், அப்படி ஒரு அறிக்கை விட்டால், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் சான்ஸ் எடுக்க முடியாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி இப்போது அமைதி காக்கிறார். சீமான், அன்புமணி போல எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடாததற்குக் காரணம் 'சிம்பல்' மேட்டரில் சான்ஸ் எடுக்க முடியாது என அவர் நினைப்பது தான் எனக் கூறுகிறார் ரவீந்திரன் துரைசாமி.

English summary
Political commentator Ravindran Duraisamy has said in an interview to One India Tamil that although the verdict has been favorable to Edappadi Palaniswami, EPS is stuck with BJP in another way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X