அதிமுக- பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி திடீர் டெல்லி விசிட்- அமித்ஷாவுடன் சந்திப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக இடையே மீண்டும் கூட்டணி அமையக் கூடும் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளதால் பாஜகவுடனான கூட்டணி குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தற்போதைய நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா இடம் பெற்றிருக்கின்றன.

edappadi palaniswami aiadmk bjp tamil nadu elections political alliance

அதிமுகவின் தத்தளிப்பு

அண்ணா திமுகவைப் பொறுத்தவரை வலிமையான கூட்டணி இல்லாமல் தத்தளித்து வருகிறது. ராஜ்யசபா சீட் விவகாரத்தில் கூட்டணியில் இருந்த தேமுதிகவும் கடுமையான அதிருப்தியில் இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் புதிய வரவாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் களமிறங்குகிறது. ஏற்கனவே சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் காண்கிறது.

இந்த நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும் என்ற குரல் அதிமுகவில் இருந்தே வலுத்து வருகிறது. அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைந்தால் அதில் பாமக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள்தான் இடம் பெற வாய்ப்பிருக்கிறது. அதேநேரத்தில் பாஜகவுடனான கூட்டணி அமைக்காவிட்டால் திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கக் கூடிய கட்சிகள், அதிமுக பக்கம் தாவக் கூடும் என்கிற நிலைமையும் இருந்து வருகிறது.

பாஜக பக்கம் தாவும் எடப்பாடி

இந்த பின்னணியில் கடந்த சில மாதங்களாக, பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்கும் என்கிற பேச்சுகள் வலம் வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களை குறைத்துள்ளார்; திமுக மட்டுமே எதிரி ; திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறிப் போய்விடக் கூடாது என்கிற கருத்தை மீண்டும் மீண்டும் முன்வைத்தும் வருகிறார்.

அதிமுக தலைவர்கள் பயணம்

இந்த நிலையில் இன்று திடீரென எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொன்டிருப்பது பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அதிமுகவின் எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர்.

அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி

சட்டசபை தேர்தலின் போதுதான் கூட்டணி குறித்து அறிவிப்போம் என கூறி வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி சென்றுள்ளார். டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சட்டசபையில் அம்பலப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்; அங்கே அவர் யாரை சந்திக்கப் போகிறார் என்கிற தகவலும் வந்துள்ளது; அப்படி சந்திக்கும் போது மும்மொழிக் கொள்கை திணிப்பை கைவிட எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாஜக கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு?

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி என அடுத்தடுத்த தலைகள் டெல்லியை நோக்கி படையெடுத்திருப்பதால் பாஜகவுடனான கூட்டணி உறுதி செய்யப்படலாம் என தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+