ரசிகர்களை கூட்டி சிவகார்த்திகேயன் செய்த விஷயம்... பின்னணி என்ன? பக்கா பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் ரசிகர்களை சந்திப்பது ஒன்றும் புதிதான விஷயம் கிடையாது. ஆனால் இந்த முறை அவர் நடத்திய சந்திப்பு, வழக்கமான ரசிகர் சந்திப்பு மாதிரி இல்லாமல் கொஞ்சம் பெரிய அளவில் நடந்திருக்கிறது. அதனால்தான் இப்போது சினிமாவை தாண்டி அரசியல் வட்டாரத்திலும் இதைப் பற்றிய பேச்சு வர ஆரம்பித்திருக்கிறது.

அக்டோபர் 4-ம் தேதி சென்னை பூவிருந்தவல்லியில் நடந்த இந்த சந்திப்பில் தமிழகம் முழுவதும் இருந்து சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். சுமார் 2,000 பேர் வெள்ளைச் சட்டை அணிந்து ஒரே இடத்தில் திரண்டிருக்கிறார்கள். மேடை, அரங்கத்தின் அமைப்பு, ரசிகர்கள் திரண்ட விதம் என எல்லாமே பார்த்தால் ஒரு பெரிய அரசியல் மாநாட்டின் தோற்றத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது. இதுதான் இப்போது முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. சிவகார்த்திகேயனும் அரசியலுக்கு வருவதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டாரா?

Sivakarthikeyan Vijay

இதற்கு இப்போதைக்கு 'ஆமாம்' என்று சொல்லிவிட முடியாது. காரணம், சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்ற எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனால், அவருடைய ரசிகர் மன்றம் ஏற்கெனவே நற்பணி இயக்கமாக செயல்பட்டு வருகிறது. ரத்ததானம், கல்வி உதவி உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகின்றன. அதனால் ரசிகர்களை ஒருங்கிணைத்து சந்திப்பது என்பது வெறும் படம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் இல்லை என்பதுதான் இப்போது கவனிக்க வைக்கும் விஷயம்.

ரசிகர்களிடம் சிவகார்த்திகேயன் என்ன சொன்னார்?

இந்த சந்திப்பில் சிவகார்த்திகேயன் பேசிய விஷயங்களைப் பார்த்தால், அரசியல் அறிவிப்பை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு அப்படியொரு அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை. மாறாக, "நன்றாக படியுங்கள், நன்றாக சம்பாதியுங்கள், முதலில் குடும்பம்தான் முக்கியம்" என்று ரசிகர்களிடம் கூறியிருக்கிறார். தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது புத்தகங்களை படிக்க வேண்டும் என்றும், படிக்கப் படிக்க சிந்தனை மேம்படும் என்றும் அறிவுரை கூறியிருக்கிறார். சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதைக் குறைத்துக்கொண்டு புத்தகங்களை படிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கும் கொஞ்சம் வித்தியாசமான சந்திப்பாக இருந்திருக்கிறது.

பொதுவாக ஒரு பெரிய நடிகர் ரசிகர்களை சந்திக்கும்போது, அவர்களுடைய அடுத்த படம், ரசிகர் மன்ற செயல்பாடுகள் என்று பேசுவது வழக்கம். ஆனால் சிவகார்த்திகேயன் இங்கே புத்தக வாசிப்பு, குடும்பம், தனிப்பட்ட வளர்ச்சி என்று பேசியிருக்கிறார். அதோடு, தன்னை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்றும், ரசிகர்கள் அனைவரும் அன்புக்காக ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Sivakarthikeyan Vijay

ரசிகர்கள் கருத்து

இங்குதான் இன்னொரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது. இந்த சந்திப்புக்குப் பிறகு பேசிய சில ரசிகர் மன்ற நிர்வாகிகள், சிவகார்த்திகேயன் இப்போதைக்கு அரசியலுக்கு வரவில்லை ஆனால் எதிர்காலத்தில் என்ன வேணாலும் நடக்கலாம் என்ற கருத்தையே தெரிவித்திருக்கிறார்கள். அவர் இப்போது சினிமாவில் படிப்படியாக வளர்ந்து ஒரு பெரிய இடத்தை அடைந்திருக்கிறார். எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடிய சூழல் ஏற்பட்டால், அப்போது அவர் எப்படிப்பட்ட கொள்கைகளை முன்வைக்கிறார் என்பதைப் பார்த்து முடிவு செய்வோம் என்பதுதான் சில ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.


அரசியல் பேச்சு

இதற்கு காரணம் சூழ்நிலைதான். விஜய் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்துவிட்டார். தனுஷின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்புகளும் சமீபத்தில் கவனம் பெற்றிருக்கின்றன. இப்போது சிவகார்த்திகேயனும் தமிழகம் முழுவதும் உள்ள தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை ஒரே இடத்தில் அழைத்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சந்தித்திருக்கிறார். அதுவும் ஒரே மாதிரியான வெள்ளைச் சட்டையில் ரசிகர்கள் திரண்டு நிற்க, அரசியல் மாநாட்டை நினைவுபடுத்தும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

இதைப் பார்த்து "அடுத்தவர் சிவகார்த்திகேயனா?" என்று கேட்பது இயல்புதான். அதனால்தான் இந்த சந்திப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.

புத்தக கண்காட்சி

ரசிகர்கள் சந்திப்பு முடிந்த பிறகு சிவகார்த்திகேயன் புத்தக அரங்கையும் பார்வையிட்டிருக்கிறார். அங்கு புத்தகங்களை பார்த்ததோடு, ஒரு பெண் ரசிகையிடம் வீடியோ கால் மூலம் பேசி இருந்தால் இதையெல்லாம் பார்க்கும் போது இப்போது விஜய்யின் அரசியல் இடத்திற்கும் சிவகார்த்திகேயனும் போட்டிக்கு வர தொடங்கிவிட்டார் என்று தான் தெரிகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+