மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி திடீர் ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், சிவி. சண்முகம், காமராஜ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடக்கும்போது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கும், குறிப்பிட்ட சின்னத்தில் மட்டுமே வாக்குகள் அனைத்தும் பதிவாகிறது என்கிற சர்ச்சை எழுந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த உபி தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாகவும், பதிவான வாக்குகள் அனைத்தும் தாமரைக்கு விழுந்ததாக தேர்தலில் போட்டியிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் மீது புகார் கூறினர்.

Edappadi Palinasamy, consulted with senior ministers

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி முறைகேடுகள் நடக்கிறது என்று டெமோ செய்து காட்டினார்கள். இதற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம் ஆம்ஆத்மி பயன்படுத்திய இயந்திரம் போலியானது என்றது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்ததுடன், ஒருவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அறிய அவருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரத்தை இணைக்கவும் முடிவு செய்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம், தேர்தல் சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்க இருக்கிறார்கள். இதில் அதிமுக அம்மா கட்சி சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதால், அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாக அமைச்சர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+