ஜெ.வீடியோ விவகாரத்திலும் வெடிக்கும் சசி குடும்ப ஈகோ 'வார்' கிருஷ்ணபிரியா பேட்டிக்கு ஜெயானந்த் பதிலடி
ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வைத்தும் சசிகலா குடும்பத்துக்குள் ஈகோ யுத்தம் வெடித்துவிட்டது,
Recommended Video

சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை முன்வைத்து இப்போது சசிகலா குடும்பத்துக்குள் பஞ்சாயத்து வெடித்து வீதிக்கு வந்துவிட்டது.
தினகரனிடம் கொடுக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேலிடம் தினகரன் கொடுத்திருந்தார்; அதை வெற்றிவேல் வெளியிட்டது துரோகம் என கொந்தளித்தார் சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா. வெற்றிவேல் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எகிறினார் கிருஷ்ணப்பிரியா.
முன்னதாக ஃபேஸ்புக்கில் கிருஷ்ணப்பிரியா கொந்தளித்திருந்தார். கிருஷ்ணப்பிரியா பேட்டி கொடுத்த உடனேயே சென்னையில் உள்ள தமது இல்லத்துக்கு சில ஊடகங்களை திவாகரன் மகன் ஜெயானந்த் வரவழைத்து பேட்டி தந்திருக்கிறார்.

சசி கோபிக்கமாட்டார்
அந்த பேட்டியில், வெற்றிவேல் செய்தது சரிதான்; வீடியோவை வெளியிட்டதால் சசிகலா வருத்தப்படமாட்டார்; அதிமுக தொண்டர்கள் நிம்மதி அடைவார்கள் என பேட்டி தந்திருக்கிறார். கிருஷ்ணப்பிரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான் ஜெயானந்த் இப்பேட்டியையே தந்திருக்கிறார்.

முந்திய தினகரன்
சசிகலா சிறைக்கு போன பின்னர் அவரது குடும்பத்தில் அரசியல் ரீதியாக தலையெடுப்பதற்கு ஆள் ஆளுக்கு போட்டியிடுகின்றனர். இதில் தினகரன் ரேஸில் முந்திக் கொண்டே இருக்கிறார்.

ஜெயானந்த் தனி ஆவர்த்தனம்
அவரை வீழ்த்த இளவரசி குடும்பத்தின் விவேக்கும் கிருஷ்ணப்பிரியாவும் ஆளுக்கொரு திசையில் பயணிக்கிறார்கள். இளவரசி குடும்ப வாரிசுகள் எதை செய்தாலும் அதற்கு போட்டியாக தினகரனுக்கு ஆதரவாக திவாகரன் மகன் ஜெயானந்த் பதிலடி கொடுத்து வருகிறார்.

ஈகோ யுத்தம்
ஜெயலலிதா வீடியோ விவகாரத்திலும் இது தொடருகிறது. ஃபேஸ்புக்கில் தொடங்கிய இந்த ஈகோ யுத்தம் இப்போது பகிரங்கமாக மீடியாக்களிலும் வெடித்து சந்தி சிரிக்கிறதே என ஆதங்கப்படுகின்றனர் மன்னார்குடி உறவினர்கள்.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி!












Click it and Unblock the Notifications