மக்களுக்கு ஒன்றும் செய்யாத ஜெ. அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம்: ஈவிகேஎஸ் அட்வைஸ்
சென்னை: மக்களுக்கு ஒன்றும் செய்யாத ஜெயலலிதா அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கருத்து கணிப்புகள் மீது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியே பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெறும்.

தொகுதி பங்கீடு குறித்து குலாம் நபி ஆசாத் எப்போது வேண்டுமானாலும் சென்னை வரலாம்.ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு முடிவாகும்.
மின்துறையில் கடந்த 5வருடங்களாக முதல்வர் ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை. மக்களுக்கு ஒன்றும் செய்யாத ஜெயலலிதா அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம்.
மின்சார ஊழல் பற்றிய டாக்குமெண்டரியை தமிழக அரசு தடைசெய்தது ஜனநாயகப் படுகொலை' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications