For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.ஜி.ஆரிடம் இருந்ததை எல்லாம் பறித்துக் கொண்டு விரட்டிவிட்டவர் தான் இந்த ஜெ.: இளங்கோவன்

By Siva
Google Oneindia Tamil News

சேலம்: எம்.ஜி. ஆரிடம் இருந்தது அனைத்தையும் பறித்துக் கொண்டு விரட்டிவிட்டவர் தான் இந்த ஜெயலலிதா என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சேலம் கோட்டை மைதானத்தில் வியாழக்கிழமை இரவு காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

பணம்

பணம்

ஜெயலலிதா ஆட்சியில் அனைத்துமே பணம் தான். பணம் கொடுக்காவிட்டால் ஒரு வேலையும் நடக்காது. சேலம் என்றாலே மாம்பழம் தான். அப்படிப்பட்ட மாம்பழத்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டபோது விவசாயிகள் மகிழ்ந்தனர். ஆனால் தற்போதோ எங்கும் சாராயம் தான் இருக்கிறது.

பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கல்கழக ஆசிரியர்கள் என்னை சந்தித்து, துணை வேந்தர் எங்களை எல்லாம் நீக்கிவிட்டு புதியவர்களை வேலைக்கு எடுக்கிறார். அவர்களிடம் ரூ.6 முதல் 7 லட்சம் வரை வாங்குகிறார் என்றார்கள். தமிழகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தராக ஜெயலலிதாவுக்கு ரூ.12 கோடி கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தவர்கள் அதை திரும்ப சம்பாதிக்கத் தானே பார்ப்பார்கள் என்று அவர்களிடம் தெரிவித்தேன்.

காமராஜர்

காமராஜர்

காமராஜர் வெள்ளையர்களை எதிர்த்து போராடி சிறைக்கு சென்றார். ஆனால் அதிமுகவினரோ எங்கம்மாவும் தான் சிறைக்கு சென்றார்கள் என்கிறார்கள். காமராஜர் போன செக்ஷன் வேறு. இந்த அம்மா நாட்டை கொள்ளையடித்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து சிறைக்கு சென்றவர்.

பூமி மாதா

பூமி மாதா

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்லாயிரகணக்கான குடிசைகள் அடித்துக் கொண்டு போய்விட்டது. ஜெயலலிதாவோ காரில் வந்து 5 நிமிடம் பார்த்துவிட்டு காலை கீழே வைக்காமல் காரில் இருந்தபடியே சென்றுவிட்டார். அவர் கால் படாமல் பூமி மாதா மகிழ்ச்சி அடைந்துள்ளார். கேவலமானவர்களின் கால் படாததை நினைத்து மகிழந்திருப்பார்.

கருணாநிதி

கருணாநிதி

92 வயதான கருணாநிதி, பெரியவர் நல்லக்கண்ணு ஆகியோர் மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை அளித்தனர். எங்கள் தலைவர் ராகுல் காந்தி வெறுங்காலில் வீடு வீடாக சென்று உதவி செய்தார். அதற்கு அதிமுகவினரோ எங்கம்மா கூடத் தான் பொங்கலுக்கு மக்களுக்கு அரிசி, வெல்லம், கரும்பு கொடுத்தார்கள் என்கிறார்கள். அதற்கு பதில் உங்க அம்மா அல்வா கொடுத்திருக்கலாம்.

வழக்கு

வழக்கு

ஜெயலலிதாவை பற்றி யார் பேசினாலும் உடனே அவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள். முதுகு எலும்புள்ள பத்திரிக்கையான ஆனந்த விகடன் மீது வழக்கு. கருணாநிதி, ராமதாஸ், என் மீது எல்லாம் வழக்கு. வழக்கு போட்டு திமுக, பாமகவை அடக்கி விடலாம். வழக்கு போட்டு இந்த இளங்கோவனின் வாயை அடக்கி விடலாம் என்று நினைத்தால் நீங்கள் தான் பலூன் போன்று வெடித்துவிடுவீர்கள்.

யானைகள்

யானைகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் யானைகளுக்கு முகாம்கள் நடத்துகிறார்கள். அப்படி என்ன யானைகள் மீது பாசம். உங்களுக்கும் யானைகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை உருவ ஒற்றுமை.

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

எங்கள் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் ரூ.170க்கு விற்றது. அப்போது நாங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.71க்கு அளித்தோம். தற்போதோ ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் ரூ.30க்கு விற்பனையாகிறது. அப்படி எனில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.18க்கும், டீசல் ரூ.14க்கும் அல்லவா அளிக்க வேண்டும்.

மோடி ஆட்சி

மோடி ஆட்சி

மோடியின் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மதவெறியை பற்றி கூறியதால் ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. தாழ்த்தப்பட்டவர்களுக்கு மோடி மட்டும் அல்ல இங்கிருக்கும் லேடியும் தான் எதிரானவர்.

அம்மா

அம்மா

தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் என்று விரும்பினால் அந்த அம்மாவை முதலில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். எனக்கு எல்லாமே மக்கள் தான் என்று ரீல் விடுகிறார். உங்களுடன் இருக்கும் சசிகலாவுக்கும் உங்களுக்கும் என்ன உறவு, அவருக்கு ரூ.1000 கோடியில் ஏன் தியேட்டர் வாங்கிக் கொடுத்தீர்கள். எல்லாமே மக்கள் தான் என்றால் போயஸ் தோட்டத்து வீட்டை மக்களுக்கு எழுதித் தருவீர்களா? உங்களுக்கு பிறகு அந்த வீடு யாருக்கு?

எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்.

ஒரு பெரியவரிடம் இருந்து அனைத்தையும் பறித்துக் கொண்டு அவரை வெளியேற்றினீர்கள். அந்த அம்மாவுடன் யாரும் எந்த தொடர்பும் வைக்க வேண்டாம் என்றார் அந்த பெரியவர். அவர் வேறு யாரும் இல்லை எம்.ஜி.ஆர். தான்.

English summary
TNCC president EVKS Elangovan said that CM Jayalalithaa snatched everything from MGR and kicked him out.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X