பரிதாபம்.. உடன் பிறந்த தம்பியை ஓட ஓட நடுரோட்டில் விரட்டி குத்தி கொன்ற அண்ணன்
உடன்பிறந்த தம்பியையே அண்ணன் நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
அறந்தாங்கி: குடும்ப தகராறு காரணமாக அண்ணனே உடன் பிறந்த தம்பியை கத்தியால் ஓட ஓட விரட்டி கொன்ற சம்பவம் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அறந்தாங்கி அருகே உள்ளது நாயக்கர்பட்டி. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி, மற்றும் கணேசன், 38. இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள். இருவருமே ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். ஒரே ஓட்டலில் வேலை பார்த்தாலும் பேசிக் கொள்வது கிடையாது. ஏனென்றால், இருவரிடையே நீண்ட காலமாக குடும்ப தகராறு இருந்து வருகிறது. அதனால் அடிக்கடி தகராறிலும் இறங்கிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

வழக்கம்போல் இரண்டு பேரும் இன்று வேலைக்கு சென்றனர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அது சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வெள்ளைச்சாமி, தன் தம்பி கணேசனை குத்த, கத்தியை எடுத்தார். இதனை கண்ட கணேசன் அந்த இடத்திலிருந்து தப்பி ஓட ஆரம்பித்தார். ஆனாலும் வெள்ளைச்சாமி விடாமல் கணேசனை துரத்தி சென்றார்.
பின்னர் விரட்டி பிடித்த கணேசனை, வெள்ளைச்சாமி நடுரோட்டில் வைத்து கத்தியால் சரமாரியாக குத்தினார். பல இடங்களில் கத்திகுத்து பட்ட கணேசன் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். பட்டப்பகலிலேயே தங்கள் கண்முன்னே நடைபெற்ற இந்த கோர சம்பவத்தை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து பயந்து ஓடினர்.
தகவலறிந்து வந்த அறந்தாங்கி போலீசார் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளைச்சாமியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உடன்பிறந்த தம்பி என்றும் பாராமல், நடுரோடு என்றும் பாராமல், பொதுமக்கள் உள்ளனர் என்பதையும் பொருட்படுத்தாமல் பட்டப்பகலில் நடந்த வெறிச்செயல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications