தம்பியை மூங்கில் குச்சியால் அடித்த அண்ணன்.. பதிலுக்கு கடப்பாரையால் அடித்த தம்பி.. பறிபோனது உயிர்
அண்ணனை கடப்பாறையால் அடித்து கொன்ற தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
கும்பகோணம்: தம்பியை அண்ணன், மூங்கில் கொம்பால் அடிக்கவும், அண்ணனை தம்பி, இரும்பு கடப்பாரை கொண்டே அடித்து கொன்றுவிட்டார்.. காரணம் நாசமா போன இந்த குடிப்பழக்கம்தான்!
கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் அருகே பாலூர் குடியான தெருவை சேர்ந்த தம்பதி சின்னராஜ் - ராணி. இவர்களுக்கு 3 பெண், 3 ஆண் பிள்ளைகள்.

சின்னராஜ் 20 வருஷத்துக்கு முன்னாடியே இறந்து விட்டார். கடைசி மகன் சுந்தரமூர்த்தி கடந்த 10 மாசத்துக்கு முன்னாடிதான் காச நோய் வியாதியால் இறந்துவிட்டார்.
தகப்பன் இல்லாததால்தானோ என்னவோ மூத்த மகனை யாராலும் கன்ட்ரோல் செய்ய முடியாமல் போய்விட்டது. அவர் பெயர் பாஸ்கரன், 42 வயதாகிறது. 10 வயசிலேயே குடிக்க ஆரம்பிச்சிட்டாராம். இப்போது மதுவுக்கு அடிமையாகவே ஆகிவிட்டார்.
தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாலே அம்மா, தம்பி அசோக்கிடம் தகராறுதான். அசோக்கிற்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்றுகூட, பாஸ்கர் ஃபுல் போதையில் வீட்டுக்கு வந்து, தகராறு செய்துள்ளார். வெறும் தகராறு மட்டுமில்லாமல், கீழே கிடந்த மூங்கில் கம்பை எடுத்து கொண்டு அடிக்க ஆரம்பித்துவிட்டார். தம்பியால் வலி பொறுக்கவே முடியவில்லை.
ஒரு கட்டத்தில் அடித்து முடித்து டயர்ட் ஆகிவிட்ட பாஸ்கர் ஒரு பிளாஸ்டிக் சேரில் போய் உட்கார்ந்து கொண்டார். ஆனால் ஆத்திரம் அடங்காத அசோக் ஓடிப்போய், இரும்பு கடப்பாரை கொண்டு வந்து பாஸ்கரின் தலையில் கொடூரமாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அண்ணன் உயிரிழந்துவிட்டார். அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளிக்கவும் விரைந்து வந்தனர்.
ஆனால் போலீஸை பார்த்ததும் தம்பி அசோக் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் விரட்டி சென்று கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணனை உடன் பிறந்த தம்பியே கடப்பாரையால் அடித்துக்கொன்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications