டிசம்பர் 21ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4ஆம் தேதியாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை டிசம்பர் 5ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 7ஆம் தேதியாகும்.

தேர்தல் தாமதம்
இதனிடையே ஆர்கே நகர் தேர்தலின் போது சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அணி கட்சியின் சின்னம், பெயருக்கு உரிமை கொண்டாடியதால் சின்னம் முடக்கப்பட்டது. சின்னம் முடக்கப்பட்ட நிலையில் ஆர்.கே நகர் இடைத் தேர்தலை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் கால தாமதம் செய்து வந்தது.

டெல்லியில் ராஜேஷ் லகானி
இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகோனி டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது.

தேர்தல் தேதி அறிவிப்பு
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றதை அடுத்து இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் எப்போது?
டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 4ஆம் தேதியாகும். வேட்புமனுக்கள் பரிசீலனை டிசம்பர் 5ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 7ஆம் தேதியாகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications