பணப்பட்டுவாடா செய்தால் ஐடி ரெய்டு நடக்கும்... தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
ஆர்கே நகர் தொகுதிக்கு வெளியே பணப்பட்டுவாடா நடந்தால் வருமான வரி சோதனை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : ஆர்கே நகர் தொகுதிக்கு வெளியே பணப்பட்டுவாடா செய்யப்பவடுவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் அவ்வாறு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் வருமான வரி சோதனை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை ஆர்கே நகர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில் அங்கு வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுப்பது தேர்தல் ஆணையத்திற்கு சவாலான விஷயமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதிக்கு வெளியே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதிக்கு வெளியே பணப்பட்டுவாடா நடைபெற்றால் வருமான வரி சோதனை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தொகுதிக்கு வெளியே நடக்கும் பணப்பட்டுவாடா குறித்து கண்காணிக்க வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications