பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல்!
சென்னை ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
சென்னை: ஜெயலலிதா மறைவை அடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்று முதல்வரானார் ஜெயலலிதா. உடல்நலக்குறைவினால் 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பாமலேயே உயிரிழந்தார். டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்ததை முன்னிட்டு அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

சட்டசபை தொகுதியில் உறுப்பினர் மரணமடைந்தாலோ, ராஜினாமா செய்தாலோ காலியாக உள்ள தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.
இந்த தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதி ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் மார்ச் 23ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 27ஆம் தேதி கடைசி நாளாகும்.
ஆர்.கே. நகர் தொகுதிக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
அதிமுக இரண்டாக பிளவு பட்டுள்ள நிலையில் இந்த இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications