ஆண்டியானலும், அமைச்சரானாலும் சோதனை ”மஸ்ட்”- தேர்தல் ஆணையம்
சென்னை: லோக்சபா தேர்தலில் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி அமைச்சர்கள், வேட்பாளர் கார்களில் சோதனை நடத்தப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதையொட்டி அமைச்சர் வேட்பாளர் மற்றும் கட்சியினரின் கார்களை பறக்கும் படையினர் சோதனையிட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி தொகுதியில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும் படைகள் வீதம் மொத்தம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் விளவங்கோடு கூடுதல் வட்டாட்சியர் ராஜாசிங் தலைமையிலான பறக்கும் படையினர் காலையில் வடசேரி , ஒழுகினசேரி பகுதிகளில் வேன் கார்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு காரில் அமைச்சர் பச்சைமால் கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான் தங்கம் உள்ளிட்டோர் ரட்சணிய சேனை டிவிஷனல் கமாண்டர் ஜெயசீலனை வெட்டூர்ணிமடம் தேவாலயத்தில் சந்திக்கச் சென்றனர்.
இவர்கள் வந்த காரையும் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். இச்சோதனையில் எதுவும் சிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications