”மாற்று தேர்தல் பணியாளர்களுக்கு ’தயிர்சாதத்துக்கு’ கூட வழி இல்லை”
சென்னை: லோக்சபா தேர்தலில் தேர்தல் மாற்று பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டிருந்த மாற்றுத் தேர்தல் பணியாளர்கள் சாப்பாடுகூட கிடைக்காமல் அவதிப்பட்டதால் அதிருப்தியில் உள்ளனர்.
எப்பொழுதும் தேர்தல் பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் அரசு ஊழியர்களால் பணியில் ஈடுபட இயலாவிட்டால், அதனை நிரப்புவதற்கு மாற்று தேர்தல் பணியாளர்களும் தேர்தல் காத்திருப்பில் வைக்கப்படுவார்கள்.
தேர்தல் அதிகாரிகளுக்குத் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்குப் பதில் மாற்று தேர்தல் பணியாளர்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் வடசென்னை தொகுதிக்காக திருவொற்றியூரில் உள்ள வெள்ளையம் செட்டி மேல்நிலைப் பள்ளியில் 250 க்கும் மேற்பட்ட மாற்றுத் தேர்தல் பணியாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் சாப்பாட்டுக்குக்கூட உதவி தேர்தல் அதிகாரி ஏற்பாடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று உதவித் தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
அப்போது உதவி தேர்தல் அதிகாரி, மாற்றுத் தேர்தல் பணியாளர்களுக்கும் தேர்தல் முடிந்த பிறகே சம்பளம் கொடுக்கப்படும். அதற்கு முன்பு எதுவும் தரப்படாது என்று உறுதியாக கூறிவிட்டார்.
இதனால் மாற்றுத் தேர்தல் பணியாளர்கள் எதுவும் செய்ய முடியாமல் தங்கள் சொந்த பணத்தைக் கொண்டே தங்கள் தேவைகளை நிறைவு செய்துகொண்டு விதியை நினைத்து நொந்து கொண்டே பணியில் ஈடுபடவேண்டியதாய் போனது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications