அம்மா உத்தரவால் மழை பெய்ததாக கூறிய கலெக்டர் உட்பட 18 ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தேர்தல் தொடர்பான புகாருக்கு உள்ளான, 18 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட அதிகாரிகளுக்கு எந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை இன்னமும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை.
மழை பாதிப்பில் தமிழகம் தத்தளித்தபோது, முதல்வர் அம்மா உத்தரவுப்படி மழை பெய்ததாக கூறி சர்ச்சைக்குள்ளானவர் சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத்.

இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், சேலம், வேலூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் மீது, ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வந்தன. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
இதுபோல பல மாவட்ட எஸ்.பிக்கள் மீதும் புகார் எழுந்தன. இந்நிலையில், தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக 18 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதில் 4 பேர் மாவட்ட கலெக்டர்கள். அதாவது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள், மாவட்ட எ.ஸ்களாக பணியாற்றியவர்கள். எஞ்சிய 9 பேர் டிஎஸ்பி மட்டத்தில் இருப்பவர்களாகும்.
வேலூர் மாவட்ட கலெக்டர் நந்தகோபால் மாற்றப்பட்டு ராஜேந்திர ரத்னுவும், சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் மாற்றப்பட்டு, கார்த்திகேயனும், திண்டுக்கல் கலெக்டர் ஹரிகரன் மாற்றப்பட்டு சத்திய பிரதா சாஹுவும், தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக நாகராஜனும் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் எஸ்.பி ராஜேஸ்வரி மாற்றப்பட்டு, மகேஸ்வரியும், சேலம் மாவட்ட எஸ்.பி சுப்புலட்சுமி மாற்றப்பட்டு, அமித்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்ட எஸ்.பி லோகநாதன் மாற்றம் செய்யப்பட்டு பண்டி கங்காதரும், நாமக்கல் மாவட்ட எஸ்.பி, மகேஷ்வரன் மாற்றப்பட்டு சசிமோகனும், திருச்சி மாவட்ட எஸ்.பி உமா மாற்றப்பட்டு நிஷா பார்த்திபனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல சில மாவட்டங்களில் வருவாய் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றம் செய்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications