165வது முறையாக வேட்பு மனுத்தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன் - இம்முறை மகாராஷ்டிரா!
சேலம்: தேர்தல் மன்னன் எனக் குறிப்பிடப்படும் மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜன் 165வது முறையாக மகாராஷ்டிராவில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கல் செய்தே பிரபலமானவர் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்த ‘தேர்தல் மன்னன்' பத்மராஜன் (55).

குடியரசுத்தலைவர் முதல் உள்ளூர் கவுன்சிலர் பதவி வரை இந்தியாவின் எப்பகுதியில் நடைபெறும் தேர்தலிலும் மனு தாக்கல் செய்வதாலேயே இவருக்கு தேர்தல் மன்னன் என்ற சிறப்புப் பெயர் கிடைத்தது எனக் கூறலாம். ஆனால், இது வரை போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் இவர் வெற்றி பெற்றதில்லை என்பது தனிக்கதை.
இவர் கடந்த 30-ந் தேதி 163-வது முறையாக சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். அதே நாளில் மேட்டூர் நகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நேற்று மராட்டிய மாநிலம் பீடு எம்.பி.தொகுதி இடைத்தேர்தலுக்கு மனு தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன். இது அவரது 165-வது மனுத் தாக்கல் ஆகும்.
அதிகப்படியான இடங்களில் மனுத்தாக்கல் செய்ததற்காக பத்மராஜன் பெயர் ஏற்கனவே லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications