தேர்தல் வரட்டும் யார் காணாமல் போறாங்கனு பார்க்கலாம்.. விஜயகாந்த் பதிலடி
தேர்தலுக்கு பிறகு காணாமல் போவது யார் என்று தெரியும் என விஜயகாந்த் முதல்வர் எடப்பாடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
திருவள்ளூர் : கூடிய விரைவில் தேர்தல் வரும் அப்போது அரசியலில் இருந்து காணாமல் போகப்போவது யார் என்று தெரியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வர் எடப்பாடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கமல்ஹாசனின் அரசியல் கட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழக அரசியலில் இருந்து விஜயகாந்த் காணாமல் போனது போல, விரைவில் கமலும் காணாமல் போவார் என்று பதிலளித்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று திருவள்ளூரில் செய்தியாளர்களை விஜயகாந்த் சந்தித்தார். அப்போது, தமிழக அரசு காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவை நிறைவேற்றாமல் உள்ளது. என்றும் கட்சிகளிடம் பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும், காவிரி நதிநீர் பிரச்னையில் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது அவரிடம் முதல்வர் எடப்பாடியின் கருத்து குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜயகாந்த், கூடிய விரைவில் தமிழகத்தில் தேர்தல் வரும். அப்போது தமிழக அரசியலில் இருந்து காணாமல் போகப்போவது தேமுதிகவா? அதிமுகவா? எனத் தெரியும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications