முதல்வர் ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிரடி சோதனை! புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டிற்குள் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை போல, புதுச்சேரிக்கும் வரும் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ்-திமுக கூட்டணி, அதிமுக ஆகிய கட்சிகள் இடையே அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும், பணம், பரிசு பொருட்கள், கதிர்காமம் பகுதியிலுள்ள, முதல்வர் ரங்கசாமியின் இல்லத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், பறக்கும்படையினருக்கு யாரோ தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, பறக்கும்படை அதிகாரிகள் சுமார் 5 வாகனங்களில், இன்று மதியம் 2 மணியளவில் ரங்கசாமி வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தியுள்ளனர். வாகன நிறுத்துமிடம், மாடிப்படிக்கட்டு பகுதிகளில் அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.
சுமார் 10 நிமிட காலம் சோதனை நடத்தியும், எந்த ஆவணத்தையும், பரிசு பொருளையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர்.
ரங்கசாமி வீட்டில் இருந்தோருக்கு முதலில் அது பறக்கும்படை அதிகாரிகள் என்பதே தெரியாதாம். சோதனை நடத்த ஆரம்பித்த பிறகே அதுகுறித்து தெரியவந்துள்ளது. இந்த சோதனை நடைபெற்றபோது, ரங்கசாமி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
முதல்வர் வீட்டிலேயே பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications