சென்னையில் தேர்தல் பயிற்சிக் கூட்டம்... கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான பயிற்சிக் கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது.
தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே அதற்கான ஆயத்தப்பணிகளில் தேர்தல் ஆணையே ஈடுபட்டு வருகிறது.

தேர்தலை எப்படி நடத்தவேண்டும் என்று முதல்கட்டமாக மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை அழைத்து பயிற்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டம் 4 ஆக பிரித்து மண்டல அளவில் நடத்தப்படுகிறது. ஏற்கனவே கோவையிலும், மதுரையிலும் பயிற்சி கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.
அடுத்ததாக சென்னையில் இன்று (வியாழக்கிழமை) கூட்டம் நடத்தப்படுகிறது.
இன்று காலை 10 மணிக்கு பயிற்சி கூட்டம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நடக்கிறது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications