மின்சாரம் தாக்கியதில் 2 சிறுமிகள் சம்பவ இடத்திலே பலி.. திருவள்ளூர் அருகே சோகம்
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் இரண்டு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த காட்டாவூரில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் இரண்டு சிறுமிகள் பலியாகினர். பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் 2 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி சவுமியா மற்றும் 1 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ரம்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மின்சாரம் தாக்கி சகோதரிகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications