'கள்ளக் காதலில்' ராணியாக வலம் வந்தவரை கட்டிபோட்டு சித்ரவதை செய்த எலக்ட்ரீஷியன் கைது
திருவண்ணாமலை பகுதியில் கள்ளக் காதலில் ராணியாக வலம் வந்தவரை கட்டி போட்டு சித்ரவதை செய்த எலக்ட்ரீஷியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தம்மைவிட்டு வேறு ஒருவருடன் தொடர்பு வைத்ததால் கள்ளக் காதலியை கட்டிப் போட்டு சித்திரவதை செய்த எலக்ட்ரீஷியனை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை உக்கலைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மகனுடன் வசித்து வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் உத்திரமல்லூர் முருகேசன் என்பவரது வீட்டுக்கு எலக்ட்ரீஷியன் வேலைக்கு போனார் ராஜேந்திரன்.
அங்கு வேலை செய்த இடத்தில் முருகேசனின் மனைவி கிருஷ்ணவேணியுடன் ராஜேந்திரன் நெருங்கிப் பழகினார். இது கள்ளக்காதலாக விஸ்வரூபமெடுத்தது.

கள்ளக் காதலியுடன் குடும்பம்
ஒருகட்டத்தில் முருகேசனைவிட்டு ராஜேந்திரனுடன் கிருஷ்ணவேணி ஓடிப் போய்விட்டார். இருவரும் கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வசிக்க தொடங்கினார்.

மற்றொரு கள்ளக் காதல்
இதனால் ராஜேந்திரனின் மனைவி, மகனுடன் தாய்வீட்டுக்குப் போய்விட்டார். இந்த நிலையில் கள்ளக் காதலி கிருஷ்ணவேணி மற்றொரு நபருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

தகராறு
கிருஷ்ணவேணியின் மற்றொரு கள்ளக் காதல் ராஜேந்திரனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கிருஷ்ணவேணியிடம் சண்டை போட்டிருக்கிறார் ராஜேந்திரன். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கைது
அப்போது கிருஷ்ணவேணியை தாக்கி அவரை கட்டிப்போட்டு வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு வெளியே போய்விட்டார் ராஜேந்திரன். கிருஷ்ணவேணியின் அலறலைத் தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து கள்ளக் காதல் ராணி கிருஷ்ணவேணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பி ஓடிய எலக்ட்ரீஷியன் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications